பொறியியல் சேர்க்கையில், மாற்றுத் திறனாளிகளுக்கு, 5,121 இடங்கள்
இருந்தும், வெறும், 213 இடங்கள் மட்டுமே நிரம்பின. மீதமுள்ள இடங்கள்,
பொதுப் பிரிவுக்கு மாற்றப்பட்டன.
பி.இ., படிப்பில், மொத்தம் உள்ள
அரச ஒதுக்கீடு இடங்களில், 3 சதவீதம், மாற்றுத் திறனாளிகளுக்கு
ஒதுக்கப்படுகிறது. அதன்படி, காது கேளாதோர், கை, கால் ஊனமுற்றோர் மற்றும்
பார்வையற்றவர்கள் என, மூன்று பிரிவினருக்கும், தலா, 1,707 இடங்கள் வீதம்,
5,121 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்த இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு, அண்ணா பல்கலையில், நேற்று
நடந்தது. மூன்று பிரிவுகளிலும் சேர்த்து, 321 பேர் விண்ணப்பித்திருந்த
நிலையில், 239 பேரின் விண்ணப்பங்களை மட்டும், அண்ணா பல்கலை ஏற்றுக்கொண்டது.
தகுதியில்லாத மற்ற மாணவர்களின் விண்ணப்பங்களை, பல்கலை நிராகரித்துவிட்டது.
கலந்தாய்வில் பங்கேற்ற, 239 மாணவர்களில், 213 பேர், பல்வேறு கல்லூரிகளை
தேர்வு செய்தனர். காது கேளாதோர் பிரிவில், திருவள்ளூர் மாவட்டம்,
பள்ளிப்பட்டைச் சேர்ந்த திலீப், 197 மதிப்பெண்களுடன், முதலிடத்தைப்
பிடித்தார். இவர், கிண்டி பொறியியல் கல்லூரியில், இ.சி.இ., பிரிவை தேர்வு
செய்தார்.
திண்டுக்கல்லைச் சேர்ந்த வெங்கட்ராமன் (195 மதிப்பெண்), கிண்டி
பொறியியல் கல்லூரியில், எம்.இ., பிரிவையும், ஈரோடு மாவட்டம், சிவகிரியைச்
சேர்ந்த கிருபாசங்கர் (188.5 மதிப்பெண்), கோவை, பி.எஸ்.ஜி., கல்லூரியில்,
எம்.இ., பாடப்பிரிவையும் தேர்வு செய்தனர்.
மொத்தமுள்ள 5,121 இடங்களில், 213 இடங்கள் போக, மீதியுள்ள இடங்கள், இன்று துவங்கும் பொது கலந்தாய்வு பிரிவில் சேர்க்கப்பட்டன.
No comments:
Post a Comment