சோமனூர், கருகம்பாளையத்தை சேர்ந்தவர் முத்துக்குமாரசாமி, 39; விசைத்தறி
தொழிலாளி. இவரது மனைவி விஜயா, 34, இவர்களுக்கு பிரவீன் சந்தர், 8, என்ற
மகனும், தீப்தி 5, என்ற மகளும் உள்ளனர். மகன், சாமளாபுரத்தில் உள்ள
பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கிறான்.
அதே பள்ளியில், மகளை எல்.கே.ஜி.,
வகுப்பில் சேர்க்க விண்ணப்பம் கொடுத்துள்ளார். பள்ளியில் இடம் தராமல்
இழுத்தடிப்பதாக கூறி, திருப்பூர் கலெக்டரிடம் புகார் மனு கொடுத்தார். அதன்
பின் முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில், மனைவி மற்றும் மகளுடன்
உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்.
தெற்கு போலீசார், அவர்களை சமரசப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.
முதன்மை கல்வி அலுவலர் ஆனந்தியிடம் கேட்ட போது, "முத்துக்குமாரின் மகளுக்கு
அதே பள்ளியில் இடம் கிடைக்க, நிர்வாகத்திடம் பேசுவதாக கூறினோம்;
போராட்டத்தை கைவிடுமாறு எழுதி கொடுங்கள் என்று கேட்டோம். பள்ளியில்
சேர்க்கை வழங்கப்படும் என்று நிர்வாகம் கூறினால் தான், எழுதி தருவேன் என்று
கூறுகிறார்" என்றார்.
No comments:
Post a Comment