அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி என்பது மாணவன்
சிந்திப்பதற்கு முட்டுக்கட்டை போட்டுவிடும் என மதுரையில் நடந்த
கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.
மதுரையில் சமம் மக்கள் இயக்கம், தமிழர் ஆய்வு மையம், நேரு யுவ கேந்திரா, சமத்துவ இளைஞர் நற்பணி மன்றம், ரோட்டரி சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து கல்வி உரிமைச் சட்டம் குறித்தான விழிப்புணர்வு கருத்தரங்கை நடத்தியது. இந்தக் கருத்தரங்கில் சென்னை "பாடம்" இதழாசிரியர் நாராயணன் பேசுகையில், இன்றைக்கு சமூகத்தைப் பிரதிபலிக்கும் இடங்களாக கல்விக்கூடங்கள்
மாறிவிட்டன. கல்வி தனியார் மயமாக்கப்பட்டு, அது வேகமாக வளர்ந்து வரும் நிலையில் கல்வி உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டது.
இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டு மூன்றாண்டுகள் கடந்த
நிலையிலும் அந்தச் சட்டம் குறித்து அறியாத போக்கு தான் மக்களிடமும் உள்ளது.
இலவசங்கள் கிடைப்பதற்காக மறியலில் ஈடுபடும் மக்கள் தங்கள் குழந்தைகள்
படிக்கும் பள்ளிகளில் நல்ல ஆசிரியர்கள் வேண்டும் என்பதற்காக மறியல்
செய்வதில்லை.
சமூக மாற்றத்துக்கான கல்வி, அறிவியல் சார்ந்த கல்வி நம் நாட்டினருக்குக் கிடைக்கவில்லை. "இந்தக் கல்வியை படிப்பதால் நல்ல வேலைக்குச் சென்று அதிகாரம் செய்யலாம் என்ற எண்ணத்தை விதைக்கும் கல்வி தான் இன்றைக்கு நடைமுறையில் இருக்கிறது. கல்வி உரிமைச் சட்டம் குறித்தான போதிய விழிப்புணர்வையும் கல்வியாளர்களிடமும் ஆசிரியர்களிடமும் மக்களிடமும் தமிழக அரசு செய்யத் தவறிவிட்டது. இன்றைக்கு தமிழகத்தில் அரசு ஊழியர்களும் சரி, அரசு பள்ளிகளில் வேலை பார்க்கும் ஆசிரியர்களும் சரி.. தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்ப்பதில்லை. அரசு ஆசிரியர்களுக்கு தான் பாடம் நடத்துவதற்கான உரிய தகுதி, தொடர் பயிற்சி அத்துடன் பள்ளியில் நல்ல கட்டமைப்பு போன்றவை உள்ளன.
அதே நேரத்தில் அரசு பள்ளிகள் தரமான கல்வி கொடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இந்த நிலையில் அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி என்பது மாணவன் சிந்திப்பதற்கு முட்டுக்கட்டை போட்டுவிடும். தனியார் பள்ளிகளுக்கு அரசு பல சலுகைகளை வழங்குகிறது. எனவே தனியார் பள்ளிகளில் அடித்தட்டு மக்களுக்கு 25 விழுக்காடு ஒதுக்கீடு என்று சட்டம் சொல்கிறது. தனியார் பள்ளிகளில் இதுபோன்று இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டால் பணக்காரர் ஏழை என இரு தரப்பு மாணவர்களிடையேயும் கற்றல் திறன் மேம்படும். புரிதல் ஏற்படும்.அதனடிப்படையில் சமத்துவம் உருவாகும்.

அரசு உதவி பெறும் பள்ளிகளில் அந்த பள்ளி நிர்வாகமே மெட்ரிக்குலேஷன் பள்ளிகளை துவங்கி நடத்தி வருவது தற்போது அதிகரித்து வருகிறது. இதற்கு தடைவிதிக்கவேண்டும். அங்கீகாரம் பெறாத பள்ளிகளின் மாணவர்களை அரசு பள்ளிகளில் சேர்க்கவேண்டும். தரமற்ற தனியார் பள்ளைகளை மூடவேண்டும். அரசு பள்ளிகள் மேம்படுத்தப்படவேண்டும். பள்ளிகளில் அமையும் மேம்பாட்டு குழுவில் பெரும்பாலும் பெற்றோர், அதிலும் பெண்கள், மாணவ பிரதிநிதிகள் போன்றோர் இடம் பெறவேண்டும் என இச்சட்டத்தில் கூறப்பட்டுள்ளதால் பள்ளிக்கும் மாணவனுக்கும் தேவையானதை இந்தக் குழு முடிவு செய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தக் குழுவின் செயல்பாடு ஜனநாயகரீதியாக இருக்கும் என்பதால் கல்வித்தரம் மேம்பட வாய்ப்பேற்படும். இதை பெற்றோர் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்றார்.
பேராசிரியரும் மூத்த குடிமக்கள் சமூக விழிப்புணர்வு செயல் மையத்தின் மாநில தலைவருமான முனைவர் பார்த்தசாரதி கருத்துரையில், தாயின் கருவறையில் இருக்கும் போதே குழந்தைக்கு கற்றல் துவங்கிவிடுகிறது. கல்வியை உரிமையைக்க வேண்டும் என்ற முயற்சி நூறு ஆண்டுகளுக்கு முன்னரே துவங்கிவிட்டது. கல்வி தராதவர்களுக்கு ஓட்டளிக்கமாட்டோம் என்று ஆத்திரப்படும் போக்கு நம்மிடம் இல்லை. தரமான மது கொடுக்கவேண்டும் என கவலைப்படும் அரசு, தனது மக்களுக்கு தரமான கல்வி கொடுப்பது குறித்தும் பேசத் தயாராக இல்லை. அடுத்த தலைமுறையிலாவது படிக்காதவன் இல்லை என்ற நிலை உருவாக வேண்டும். அதனை மனதில் கொண்டு இந்தச் சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும் என்றார்.
இந்த கருங்தரங்கில் திரளான இளைஞர்களும் பெண்களும் பங்கேற்றனர்.அவர்கள் எழுப்பிய வினாக்களுக்கு கருத்துரையாளர்கள் பதிலளித்தனர். கருத்தரங்கில், "அனைத்துக் குழந்தைகளையும் பள்ளிக்கு அனுப்பி வைப்போம். குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிப்போம். பள்ளி மேலாண்மைக்குழுவில் பெற்றோர் பங்கேற்று குழந்தைகளுக்கு தரமான கல்வியை உறுதி செய்வோம். பாகுபாடு மற்றும் வன்முறை இல்லாத பள்ளிகளாய் நம் பள்ளிகளை மாற்றுவோம்" என்ற உறுதி மொழி எடுக்கப்பட்டது. இந்த சட்டச் செயல்பாட்டை கண்காணிக்க மாநில குழந்தைகள் உரிமை ஆணையத்தை நிறுவி அதன் தலைவராகக் கல்வியாளரை நியமிக்கவேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
No comments:
Post a Comment