அண்ணாமலைப் பல்கலையில், மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு, வரும் 28ம்
தேதி கலந்தாய்வு துவங்குகிறது. இன்ஜினியரிங் படிப்புக்கு, ஜூலை 3ம் தேதி
துவங்கி, 7ம் தேதி வரையிலும், வேளாண் மற்றும் தோட்டக் கலைத் துறை
படிப்புக்கு, ஜூலை 8ம் தேதி முதல், 12ம் தேதி வரை கலந்தாய்வு நடக்கிறது.
இதுகுறித்து நிர்வாக சிறப்பு
அதிகாரி, ஷிவ்தாஸ் மீனா நிருபர்களிடம் கூறியதாவது: சிதம்பரம் அண்ணாமலை
பல்கலைக் கழகத்தில், 2013-14ம் ஆண்டுக்கான மருத்துவம் மற்றும் மருத்துவம்
சார்ந்த படிப்புகள், இன்ஜினியரிங் மற்றும் வேளாண் படிப்புகளுக்கான நுழைவுத்
தேர்வு முடிவுகள், 22ம் தேதி இணைய தளத்தில் வெளியிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து, மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு, 28ம் தேதி
மாற்றுத் திறனாளிகள் மற்றும் பொதுப் பிரிவினருக்கும், 29ம் தேதி பிற
வகுப்பினர் (ஓ.சி.,) தவிர, மற்ற அனைத்து வகுப்பினருக்கும், 30ம் தேதி
எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கும் கலந்தாய்வு நடக்கிறது.
இன்ஜினியரிங் மற்றும் வேளாண்மை படிப்பு கலந்தாய்வில், முதல் நாள்
மாற்றுத் திறனாளிகளுக்கு நடத்தப்படும். இதைத் தொடர்ந்து மற்ற அனைத்து
வகுப்பினருக்கும் கலந்தாய்வு நடத்தபடும். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment