அரசு ஐ.டி.ஐ.,க்களில் சேர, மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள்
வினியோகப்பட்டு வருகின்றன. சென்னை, வேலூர், தஞ்சாவூர், விருதுநகர்
உள்ளிட்ட, 32 மாவட்டங்களில், 62 தொழிற் பயிற்சி மையங்கள் உள்ளன.
சென்னையில், அம்பத்தூர், கிண்டி,
திருவான்மியூரில் அரசு தொழில் பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இதில், வெல்டர், டர்னர், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ், டெஸ்க் டாப்
பப்ளிசிங் ஆப்ரேட்டர், கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர், புரோகிராமிங் அசிஸ்டென்ட்
உள்ளிட்ட, 30க்கும் மேற்பட்ட பாடங்கள் வழங்கப்படுகின்றன.
அரசு தொழிற் பயிற்சி நிலையங்கள், அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி
தனியார் தொழில் பயிற்சி நிலையங்களில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர,
மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எட்டாம் வகுப்பு
மற்றும் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்களை, மாணவர்கள் எந்த ஒரு அரசு தொழில் பயிற்சி நிலையத்தில்,
நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ பெறலாம். விண்ணப்ப விலை, 50 ரூபாய்.
மாவட்ட கலந்தாய்வு முறையில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதால், ஒரு
மாவட்டத்திற்கு ஒரு விண்ணப்பத்தை சமர்ப்பித்தால் போதும். பூர்த்தி
செய்யப்பட்ட விண்ணப்பங்களை, ஜூன், 29ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
No comments:
Post a Comment