இங்கிலாந்தை சேர்ந்த க்யூ.எஸ். நிறுவனம், சர்வதேச அளவில் பல்கலைக்கழகங்களை ஆய்வு நடத்தி ஆண்டுதோறும் தரவரிசை பட்டியலை வெளியிடுகிறது.
2013ம் ஆண்டு ஆசியாவின்
சிறந்த பல்கலைக்கழக பட்டியலில், ஹாங்காங் அறிவியல் தொழில்நுட்ப
பல்கலைக்கழகம் முதலிடம் பெற்றுள்ளது. இப்பட்டியலில் வழக்கம் போல, இந்திய
பல்கலைக்கழங்களின் நிலை பரிதாபமாக இருக்கிறது.
முதல் 25 இடங்களுக்குள் எந்த இந்திய பல்கலைக்கழகமும் இடம்பெறவில்லை. இப்பட்டியலில் 38வது இடத்தில் தான் டில்லி ஐ.ஐ.டி., வருகிறது. இதுவுமே சென்ற ஆண்டு 36வது இடத்தில் இருந்தது. தற்போது 2 இடங்கள் பின் தங்கியிருக்கிறது.
இப்பட்டியலில் இந்திய பல்கலைகளின் தர வரிசையை பார்க்கலாம்.
கல்வி நிறுவனத்தின் பெயர் | 2012 | 2013 |
ஐ.ஐ.டி., டில்லி | 36 | 38 |
ஐ.ஐ.டி., மும்பை | 34 | 39 |
ஐ.ஐ.டி., சென்னை | 45 | 49 |
ஐ.ஐ.டி., கான்பூர் | 47 | 51 |
ஐ.ஐ.டி., காரக்பூர் | 56 | 58 |
ஐ.ஐ.டி., ரூர்க்கி | 65 | 66 |
டில்லி பல்கலைக்கழகம் | 78 | 80 |
ஐ.ஐ.டி., கவுகாத்தி | 89 | 89 |
மும்பை பல்கலை | - | 140 |
கோல்கட்டா பல்கலை | 144 | 143 |
No comments:
Post a Comment