பயோ கெமிஸ்ட்ரி என்பது, உயிரிகளின் உடலில் நடைபெறும் வேதிச் செயல்பாடு,
மாற்றங்களை ஆய்வு செய்யும் ஒரு துறை. செல்களின் அடிப்படைக்
கட்டமைப்புகளான, புரதம், கார்போஹைட்ரேட், கொழுப்பு, நியூக்ளிக் அமிலம்,
இதர மூலக்கூறுகளையும் அவற்றின் வேதியியல் பண்புகளையும் ஆய்வு செய்கிறது.
வழங்கும் படிப்புகள்
1. பி.இ., (பயோ கெமிக்கல் இன்ஜினியரிங்)
2. பி.டெக்., (பயோ கெமிக்கல் இன்ஜினியரிங்)
3. பி.எஸ்சி., (பயோ கெமிஸ்ட்ரி)
4. எம்.எஸ்சி., (பயோ கெமிஸ்ட்ரி)
5. எம்.பில்., ( பயோ கெமிஸ்ட்ரி)
6. எம்.டி., ( பயோ கெமிஸ்ட்ரி)
2. பி.டெக்., (பயோ கெமிக்கல் இன்ஜினியரிங்)
3. பி.எஸ்சி., (பயோ கெமிஸ்ட்ரி)
4. எம்.எஸ்சி., (பயோ கெமிஸ்ட்ரி)
5. எம்.பில்., ( பயோ கெமிஸ்ட்ரி)
6. எம்.டி., ( பயோ கெமிஸ்ட்ரி)
கல்வித்தகுதி
பிளஸ் 2வில் அறிவியல் பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றவர்கள், இப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.
படிப்பு காலம்
பயோ கெமிஸ்ட்ரி படிப்பை பி.எஸ்சி.,யில் 3 ஆண்டும்,
எம்.எஸ்சி.,யில் 2 ஆண்டும் படிக்க வேண்டும். இந்த 5 ஆண்டுகளில், உயிர்கரிம
வேதியியல், உயிரியற்பியல் வேதியியல், மனித உடல்செயலியல், நுண்ணுயிரியல்
மற்றும் வைராலஜி, அடிப்படை நோய் எதிர்ப்பியல், என்சைமாலஜி,
கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புகளின் இடைநிலை வளர்ச்சிதை
மாற்றம்,அமைப்பு உயிரியல், பயோ எனர்ஜிட்டிக்ஸ், மெம்ப்ரான்செஸ்,
உயிரியலில் கணினி பயன்பாடுகள், உணவூட்டம் மற்றும் மருத்துவ உயிர்வேதியியல்,
மூலக்கூறு உயிரியல் போன்றவை விரிவாக கற்றுத்தரப்படுகிறது.
இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள பல்வேறு பல்கலைகள், அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் இப்படிப்பை வழங்குகின்றன.
வேலைவாய்ப்பு
பயோகெமிஸ்ட்ரி பிரிவில் பட்டப்படிப்பை முடித்தவர்களுக்கு,
உயிரியல் தொழில்நுட்பம், உணவு மற்றும் பானம், உடல்நலம் மற்றும்
அழகுசாதனங்கள் துறை, மருத்துவ சாதனங்கள், வேதிப்பொருள்கள் தயாரிக்கும்
நிறுவனம், ஆராய்ச்சி நிறுவனங்கள், ஆய்வுக்கூடங்கள் போன்ற தனியார்
துறைகளிலும், விவசாயம் மற்றும் மீன்வளத்துறை, மருத்துவமனைகள்,
பல்கலைக்கழகங்கள், பொது சுகாதார நிறுவனங்கள், ஆய்வுக்கூடங்கள், ரத்த
வங்கிகள், தடய அறிவியல் துறை, தேசிய ரத்த சேவை, புற்றுநோய் ஆராய்ச்சி
நிறுவனங்கள் போன்ற பொதுத்துறை நிறுவனங்களில் ஏராளமான வாய்ப்புகள்
காத்துக்கிடக்கின்றன.
சம்பளம்
புதிதாக இத்துறையில் சேரும் நபருக்கு மாதம் ரூ.9,000 முதல்
25,000 வரை சம்பளம் கிடைக்கும். துறை அனுபவம், அறிவு, திறமைக்கு ஏற்ப
மேலும் சம்பளம் உயரும்.
No comments:
Post a Comment