பி.இ., சேர்க்கையில், விளையாட்டுப் பிரிவின் கீழ், நேற்று முன்தினம்,
420 இடங்கள் நிரம்பிய நிலையில், நேற்று காலை, "விளையாட்டுப் பிரிவின் கீழ்
விண்ணப்பித்த மாணவர்கள், கலந்தாய்வுக்கு வர வேண்டாம்" என அண்ணா பல்கலை,
எஸ்.எம்.எஸ்., மூலம், தகவல் அனுப்பியது.
பொறியியல் சேர்க்கை செயலர்
ரைமண்ட் உத்தரியராஜ் கூறுகையில், "நேற்றே, பெரும்பாலான இடங்கள்
நிரம்பிவிட்டன. குறிப்பாக, பி.சி., பிரிவு இடங்கள், முழுவதும்
நிரம்பிவிட்டன. காலியிடங்கள் இல்லாத நிலையில், மாணவர்கள், தேவையில்லாமல்
வந்து ஏமாற வேண்டாம் என்பதற்காக, காலையில் எஸ்.எம்.எஸ்., அனுப்பினோம்" என
தெரிவித்தார்.
ஆனாலும், ஏராளமான மாணவர்கள் கலந்தாய்வுக்கு வந்துவிட்டனர். காலியிடங்கள்
இல்லை என, தெரிந்ததும், முன்கூட்டியே ஏன் தெரிவிக்கவில்லை என, பல்கலை
அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
No comments:
Post a Comment