இளநிலை ஆராய்ச்சியாளர் மற்றும் விரிவுரையாளர் தேசிய தகுதி தேர்வு, காரைக்குடியில் நடந்தது. 3,837 பேர் தேர்வெழுதினர்.
சி.எஸ்.ஐ.ஆர்.,(கவுன்சில் ஆப் சயின்ஸ்டிஸ்ட் இன்டஸ்டிரியல் ரிசர்ஜ்)
அமைப்பின் மனித வள மேம்பாட்டு குழுமம், யு.ஜி.சி., சார்பில், இளநிலை
ஆராய்ச்சியாளர் மற்றும் விரிவுரையாளர் தேசிய தகுதித் தேர்வை நேற்று
காரைக்குடியில் நடத்தியது.
மொத்தம் 6,366 பேர் விண்ணப்பித்து இருந்தனர். உயிர் அறிவியல், புவி
வானவியல், கடல் மற்றும் கோளவியல் அறிவியல், கணித அறிவியல்,வேதி அறிவியல்,
இயற்பியல் அறிவியல், பொறியியல் அறிவியல் பாடத்திற்கான இத்தேர்வை 3,837 பேர்
எழுதினர். அழகப்பா இன்ஜி., கல்லூரி, மெட்ரிக்., பள்ளி, கலை கல்லூரி,
பாலிடெக்னிக், சிக்ரி வளாகம் என, 12 மையங்களில் இத்தேர்வு நடந்தது.
சிக்ரி இயக்குனர் (பொறுப்பு) என்.பழனிச்சாமி, சி.எஸ்.ஐ.ஆர்., முதன்மை
கண்காணிப்பாளர் துஷ்யந்த குமார், நிர்வாக கட்டுப்பாட்டு அதிகாரி
கிறிஸ்துராஜ் தேர்வை கண்காணித்தனர்.
No comments:
Post a Comment