நாட்டிலுள்ள ஐ.ஐ.டி.,கள் மற்றும் தன்பாத்திலுள்ள
ஐ.எஸ்.எம்., போன்ற கல்வி நிறுவனங்களில் சேர, கடந்த 2ம் தேதி(ஜுன்)
நடத்தப்பட்ட ஜே.இ.இ.,(அட்வான்ஸ்டு) தேர்வின்(தாள் 1 மற்றும் தாள் 2) Answer
Key, பிராந்திய ஐ.ஐ.டி.,களின் ஜே.இ.இ., இணையதளங்களில், ஜுன் 11ம் தேதி
வெளியிடப்படுகிறது.
இதே இணையதளத்தில், ஒரு மாணவர் தனது பதில் தாள் மற்றும்
பெற்ற மதிப்பெண்கள் ஆகியவற்றை 14 முதல் 17ம் தேதி வரை பார்க்கலாம்.
இதன்மூலமாக, தனது தாள் திருத்தப்பட்ட முறை மற்றும் அதற்கு வழங்கப்பட்ட
மதிப்பெண் ஆகியவை குறித்தும் முறையீடு செய்ய முடியும். இதுபோன்று
மதிப்பாய்வு செய்ய வேண்டுமெனில், ஒவ்வொரு கேள்விக்கும் ரூ.500 செலுத்த
வேண்டும்.
ஜே.இ.இ.,(அட்வான்ஸ்டு) தேர்வின் முடிவுகள், ஜுன் 23ம் தேதி
வெளியிடப்படுகின்றன. இதில் வெற்றிபெற்ற மாணவர்கள், மொத்தம் 16 ஐ.ஐ.டி.,கள்
மற்றும் ஐ.எஸ்.எம்., தன்பாத் ஆகியவற்றில் வழங்கப்படும் பலவிதமான
படிப்புகளில் தங்களுக்கு விருப்பமானவற்றை தேர்ந்தெடுக்க அதே இணையதளத்தில்
log in செய்ய வேண்டும். இந்த செயல்பாட்டை ஜுன் 24 முதல் ஜுன் 30க்குள்
மேற்கொள்ள வேண்டும்.
ரூர்கி மற்றும் காரக்பூர் ஆகிய இடங்களின் ஐ.ஐ.டி.,களில்
வழங்கப்படும் பி.ஆர்க்., படிப்பில் சேர விரும்புவோர், AAT(Architecture
Aptitude Test) தேர்வில் வெற்றிபெற வேண்டும். இந்த தேர்வானது, மும்பை,
டெல்லி, குவஹாத்தி, கான்பூர், காரக்பூர், சென்னை மற்றும் ரூர்கி ஆகிய
இடங்களிலுள்ள ஐ.ஐ.டி.,களில், வரும் ஜுன் 28ம் தேதி காலை 9 மணிமுதல் நண்பகல்
12 மணிவரை நடத்தப்படும்.
இத்தேர்வில் கலந்துகொள்ள, ஜுன் 24 முதல் 25 வரை, ஜே.இ.இ.,
அட்வான்ஸ்டு போர்டல்(portal) சென்று, பதிவுசெய்து கொள்ள வேண்டும்.
மாணவர்களுக்கான இடம் வழங்கப்பட்டது பற்றிய முதல் பட்டியல், ஜுலை 4ம் தேதி,
ஆன்லைனில் அறிவிக்கப்படும்.
No comments:
Post a Comment