மருத்துவ படிப்பிற்கான சென்டாக் கவுன்சிலிங் வரும் ஜூலை 6ம் தேதி துவங்கி, ஐந்து நாட்கள் நடக்கிறது.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., பி.எஸ்சி., நர்சிங் உள்ளிட்ட
மருத்துவ படிப்பிற்கான சென்டாக் கவுன்சிலிங், புதுச்சேரி பொறியியல் கல்லூரி
வளாகத்தில் உள்ள சென்டாக் அலுவலகத்தில் வரும் ஜூலை 6ம் தேதி துவங்குகிறது.
காலை 9:00 மணிக்கு நடக்கும் சிறப்பு ஒதுக்கீட்டு
கவுன்சிலிங்கில், தகுதி வாய்ந்த முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் கலந்து
கொள்கின்றனர். 10:00 மணிக்கு சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கும்,
12:00 மணிக்கு மாற்று திறனாளிகளுக்கும், 2:00 மணிக்கு விளையாட்டு
வீரர்களுக்கும் கவுன்சிலிங் நடக்கிறது.
பொதுப்பிரிவு உள்பட அனைத்துப் பிரிவும் உள்ளடங்கிய
புதுச்சேரி மாணவர்களுக்கு வரும் 8ம் தேதி துவங்குகிறது. தரவரிசைப்
பட்டியலில் கட் ஆப் மதிப்பெண்கள் 200 முதல் 175.555 வரை எடுத்த 698
மாணவர்கள் முதல் நாள் கவுன்சிலிங்கில் பங்கேற்கின்றனர்.
9ம் தேதி 175.333 முதல் 152.333 வரை, 10ம் தேதி 152 முதல்
118.444 வரை, 11ம் தேதி 118.333 முதல் 80 வரை கட் ஆப் மதிப்பெண்கள் எடுத்த
மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடக்கிறது.
No comments:
Post a Comment