மருத்துவம், பொறியியல் படிப்பிற்கு கவுன்சிலிங் கட்டணம் வெளியிடப்பட்டுள்ளது.
சென்டாக் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பித்த அனைத்து
மாணவர்களுக்கும் கவுன்சிலிங் அழைப்புக் கடிதம் தபாலில் அனுப்பி
வைக்கப்பட்டுள்ளது. அழைப்புக் கடிதம் கிடைக்க பெறாத மாணவர்கள் தரவரிசைப்
பட்டியலில் தங்களுடைய பெயர் இருப்பின் கவுன்சிலிங் நடைபெறும் குறிப்பிட்ட
தேதி, நேரத்தில் கலந்து கொள்ளலாம்.
கவுன்சிலிங் வரும் மாணவர்கள், தி கன்வீனர், சென்டாக்,
புதுச்சேரி பொறியியல் கல்லூரி வளாகம் என்ற பெயருக்கு புதுச்சேரியில்
மாற்றத்தக்க வகையில் 850 ரூபாய்க்கு டி.டி.,எடுத்து வர வேண்டும்.
எஸ்.சி.,எஸ்.டி., மாணவர்கள் 350 ரூபாய்க்கு டி.டி., எடுத்தால் போதுமானது.
கவுன்சிலிங் வருபவர்கள், மதிப்பெண், மாற்றுச் சான்றிதழ்,
குடியிருப்பு, குடியுரிமை சான்றிதழ், முன்னாள் ராணுவ வீரர் வாரிசு, மாற்று
திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், விடுதலைப்போராட்ட வீரர்களின் வாரிசுகள்
எனில், அதற்கான அசல் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும் என
அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment