வசூலாகாத கல்விக் கடன்களை திரும்பப் பெறுவதற்கு, கடன் சீர்திருத்த
திட்டத்தை, கனரா வங்கி செயல்படுத்த உள்ளது. இவ்வங்கியின் வசூலாகாத கல்விக்
கடன், 9 சதவீதமாக உள்ளது. இதை, 2 சதவீதமாகக் குறைக்க இவ்வங்கி
திட்டமிட்டுள்ளது.
இதையடுத்து, வசூலாகாத கடன்களை
திரும்பப் பெறும் நோக்கில், கடன் தவணை காலத்தை நீட்டித்தல், சுலப மாத தவணை
உள்ளிட்ட சலுகைகளை வழங்க, இவ்வங்கி முன்வந்துள்ளது. கல்விக் கடன்
சீர்திருத்த திட்டம் மூலம், மாணவர்களின் பெற்றோர், மிகச் சுலபமாக கடனை
திரும்பச் செலுத்த முன்வருவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கனரா வங்கியின் மொத்த கல்விக் கடன், 4,200 கோடி ரூபாயாக உள்ளது. இதில்,
தமிழகத்தின் பங்கு, 430 கோடி ரூபாயாகவும், அதில் வசூலாகாத கடன், 100 கோடி
ரூபாய்க்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment