பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள லவ்லி புரொபஷனல் பல்கலைக்கழக
துணைவேந்தர் ரமேஷ் கன்வர் தினமலர் கல்விமலருக்கு அளித்த பிரத்யேக பேட்டி:
அனைத்து
ஆசிரியர்களும் தங்களது துறைசார்ந்த அறிவை தொடர்ந்து மேம்படுத்த வேண்டும்.
அப்போதுதான், அவர்களால் சிறந்த மாணவர்களை உருவாக்க முடியும். இந்தியாவில்
ஆராய்ச்சி ஈடுபாடு குறைவாக இருப்பது கவலை அளிக்கிறது. ஆராய்ச்சி ஈடுபாடு
குறைவே சிறந்த ஆசிரியர்களுக்கான தேவையை அதிகரித்துள்ளது.
தொழில் நிறுவனங்களின் தேவையைப் பூர்த்தி செய்ய இயலாத
வகையிலான பாடத்திட்டத்தை கல்வி நிறுவனங்கள் பின்பற்றுவது
தொழில்நுட்பத்துறைக்கும் மனித தேவைக்கும் இடையே பெரிய வெற்றிடம் ஏற்பட
வாய்ப்பாக அமைகிறது. இதன் விளைவு, ஒரு புறம் திறமையான மனிதவளத்திற்கு
ஒருபுறம் தேவை அதிகரிக்கிறது. மறுபுறம் வெறும் பட்டதாரிகளுக்கு வேலை
கிடைப்பதில்லை. எனவே, குறிப்பாக பொறியியல் படிப்பில் பாடத்திட்டங்கள்
தொடர்ந்து ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, நடைமுறைக்கு ஏற்ற வகையில்
மேம்படுத்தப்பட வேண்டும்.
பார்மசி, உடற்கல்வியியல், மேலாண்மை, கலை அறிவியல்
படிப்புகளுக்கான வாய்ப்புகள் அதிகளவில் காணப்படுகின்றன. அதற் ஏற்ப
இளைஞர்கள் தங்களது திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டியதும் அவசியம் என்பதை
கல்வி நிறுவனங்களும் உணர்ந்து அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.
இந்தியா ஏழை நாடாக கருதப்பட்டாலும், இளைஞர்களின்
எண்ணிக்கையில் இந்தியா முன்னிலையில் உள்ளது. ஒவ்வொரு குழந்தைக்கும் தரமான
கல்வி வழங்கப்பட வேண்டும். திறமை ஊக்குவிக்கப்பட வேண்டும்.
சாதாரணமானவர்களுக்கும் உயர்கல்வி சாத்தியப்பட வேண்டும். பொருளாதார
பாகுபாடின்றி அனைவருக்கும் சிறந்த உயர்கல்வி அளிக்கப்பட வேண்டும். இதற்கான
முயற்சியாக ஏராளாமான உதவித்தொகைகளை ஆண்டுதோறும் மாணவர்களுக்கு வழங்கி
வருகிறது லவ்லி புரொபஷனல் பல்கலைக்கழகம்.
ஒரே வளாகத்தில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்
எண்ணிக்கையுடன் நாட்டிலேயே மிகப்பெரிய பல்கலைக்கழகமான எல்.பி.யு.,வில்
200க்கும் மேற்பட்ட படிப்புகளை வழங்குகிறது. சில ஆண்டுகளிலேயே சிறப்பான
வளர்ச்சி பெற்றுள்ள இப்பல்கலைக்கழகம் ஆராய்ச்சி ஈடுபாட்டையும் வெகுவாக
ஊக்குவிக்குகிறது. நாட்டிலுள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் தனது சமூக
பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். இவ்வாறு ரமேஷ் கன்வர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment