தமிழகம் முழுவுதும் பள்ளிகள் திறந்த நாளில், பாடப்புத்தகங்கள்
வழங்கப்பட்ட விபரங்களை, பள்ளிக்கல்வித்துறை சேகரித்து வருகிறது.
பாடப்புத்தகங்கள் மற்றும் இலவச பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்காத
அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட உள்ளது.
தமிழகத்தில் ஜூன் 10ல் பள்ளிகள்
திறக்கப்பட்டன. இதை தொடர்ந்து, அந்தந்த மாவட்டங்களுக்கு தேவையான
புத்தகங்கள், நோட்டுகள்,புத்தகப்பை, சீருடை உட்ளிட்ட பொருட்கள் குறித்து
விபரங்கள் பெறப்பட்டன. தேவையான பொருட்களை, அந்தந்த பகுதி கிடங்குகளில்
இருந்து,பள்ளிகள் திறக்கும் முன்பே அனுப்பி வைக்கப்பட்டன.
இந்நிலையில், புத்தகங்கள், இலவசப்பொருட்கள் வழங்கிய விபரங்களை,அந்தந்த
முதன்மை கல்வி அலுவலகங்கள் மூலமாக,பள்ளிக்கல்வித்துறை சேகரித்து வருகிறது.
மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள், இலவச பொருட்களை வழங்காத அதிகாரிகளிடம்,
அதற்கான விளக்கமும் கேட்கப்பட உள்ளன.
No comments:
Post a Comment