ஆதிதிராவிட நல துவக்கப் பள்ளிகளில் 15 ஆண்டுகளாக தலைமை ஆசிரியர்கள் நியமிக்கப்படாமல் இருப்பதால் பெற்றோர் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் 1998ம் ஆண்டு ஆதிதிராவிட நலத் துறையின்
கீழ் செயல்படும்படியான 5 ஆதிதிராவிடர் நல துவக்கப் பள்ளிகள்
துவக்கப்பட்டன. அவை கடலூர் வட்டம் தியாகவள்ளி, பண்ருட்டி வட்டம் புலியூர்
காட்டுச்சாகை, சிதம்பரம் வட்டம் மணக்காடு மற்றும் வத்தராயன்தெத்து,
காட்டுமன்னார்கோவில் வட்டம் டி.நெடுஞ்சேரி ஆகிய பள்ளிகளாகும்.
புதியதாக திறக்கப்பட்ட ஆதிதிராவிட நல துவக்கப் பள்ளிக்கு
தலைமை ஆசிரியர் நியமிக்காமல் அவசர கோலத்தில் பள்ளிகள் துவங்கப்பட்டன.
அப்போது அதிகாரிகள் சில தினங்களில் தலைமை ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்
என தெரிவித்தனர்.
இந்தப் பள்ளிகளில் தற்போது ஏழை எளிய குழந்தைகள் 100க்கும்
மேற்பட்டவர்கள் படித்து வருகின்றனர். பள்ளி துவங்கி 15 ஆண்டுகள் முடிந்த
பின்னரும் இது நாள் வரை தலைமை ஆசிரியர்கள் நியமிக்கப் படவில்லை.
புதியதாக உருவாக்கப்பட்ட பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர்கள்
நியமனம் செய்வதில் மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை அலுவலகத்தில் ஏற்பட்ட
குழப்பத்தால் நியமன பைலை ஓரங்கட்டி வைத்துவிட்டனர். துறை அதிகாரிகளின்
குழப்பத்தால் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனால் தலைமை ஆசிரியர்கள் நியமன பிரச்னை உயர்
அதிகாரிகளுக்குத் தெரிவிக்காமல் அமுக்கியே வாசிக்கப்பட்டு வருவதால் பள்ளி
மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள் தடைப்பட்டு வருகிறது. இதனால் பள்ளி
நிர்வாகத்தில் சில குளறுபடிகள் ஏற்பட்டு வருகிறது.
தலைமை ஆசிரியர் இல்லாமல், அவரது பணியை உதவி ஆசிரியர் செய்து
வருவதால் கூடுதல் பணி சுமையால் மற்ற ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டு
வருகின்றனர். மேலும் தலைமை ஆசிரியர் பணி நியமன குழப்பத்தால் மாணவர்கள்
கல்வி கற்க முடியாமல் கல்வித் தரம் குறைந்துள்ளது.
இதனைச் சுட்டிக்காட்டி பெற்றோர்கள், தலைமை ஆசிரியர்களை
நியமிக்க வேண்டும் என பல முறை மாவட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்து
அலுத்துவிட்டனர். மாவட்ட அதிகாரிகள் மாணவர்கள் நலனில் அக்கறை இல்லாமல்
அலட்சியப்படுத்தி வருகின்றனர். இதனால் ஐந்து பள்ளிகளின் பெற்றோர் அதிருப்தி
அடைந்துள்ளனர்.
No comments:
Post a Comment