பழனி அருகே நெய்க்காரபட்டியிலுள்ள பள்ளியில்
மாணவியை பிரம்பால் தாக்கிய ஆசிரியையை பணி நீக்கம் செய்ய, மாவட்டக் கல்வி
அலுவலர் உத்தரவிட்டார்.
பழனி நெய்க்காரப்பட்டியில் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளியில் 6-ஆம் வகுப்பு பயிலும் பழைய ஆயக்குடியைச் சேர்ந்த கணபதி மகள் பாரத மாதா (11). இந்த மாணவி பள்ளி பஸ்ஸில் ஏறும்போது, உடற்கல்வி ஆசிரியை காளீஸ்வரி பிரம்பால் அடித்ததில், மாணவிக்கு தொடை, தலை ஆகிய இடங்களில் காயம் ஏற்பட்டதாம். ஆயக்குடி அரசு மருத்துவமனையில் மாணவி சிகிச்சை பெற்றுள்ளார்.
மாணவி தாக்கப்பட்டது தொடர்பாக அவரது பெற்றோர், பழனி மாவட்டக் கல்வி அலுவலர் கலையரசியிடம் புதன்கிழமை புகார் தெரிவித்தனர். மேலும், புகாரின் மீது நடவடிக்கை எடுக்காவிடில், குழந்தையுடன் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக தமிழக முதல்வர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோருக்கு பெற்றோர் தரப்பில் கடிதம் அனுப்பப்பட்டது.
இதைத் தொடர்ந்து, புகாரை எழுத்து மூலமாக பெற்ற மாவட்டக் கல்வி அலுவலர் கலையரசி, வியாழக்கிழமை பள்ளிக்குச் சென்று விசாரணை மேற்கொண்டார். அப்போது, மாணவி கீழே விழுந்ததில் தலையில், காலில் அடிபட்டது என்று பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, பள்ளி நிர்வாகத்தினர் மாணவர்கள் இருவரை அழைத்து வந்து விசாரித்துக் கொள்ளும்படி தெரிவித்தனர். அதன்படி நடத்திய விசாரணையில், மாணவியை ஆசிரியை தாக்கியது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, மாவட்டக் கல்வி அலுவலர் கலையரசி, சம்பந்தப்பட்ட உடற்கல்வி ஆசிரியையை பணிநீக்கம் செய்ய உத்தரவிட்டார். தொடர்ந்து, பள்ளி நிர்வாகமும் ஆசிரியையை பணிநீக்கம் செய்து உடனடியாக உத்தரவிட்டது.

No comments:
Post a Comment