தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில், பட்டப் படிப்பு மற்றும்
பட்டயப் படிப்பில் சேர, விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு, அடுத்த மாதம், 15ம்
தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
தமிழக அரசின் தொழிலாளர் மற்றும்
வேலைவாய்ப்புத் துறை சார்பில், தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம்
நடத்தப்படுகிறது. இங்கு, எம்.ஏ., (தொழிலாளர் மேலாண்மை) இரண்டாண்டு முழு நேர
படிப்பு, தொழிலாளர் நிர்வாகவியலில், முதுகலை பட்டயப் படிப்பு
(பி.ஜி.டி.எல்.ஏ., மாலை நேர படிப்பு) ஆகியவற்றுக்கு, விண்ணப்பங்கள்
வழங்கப்படுகின்றன.
விண்ணப்பங்களை, 200 ரூபாய் செலுத்தி, சென்னை காமராசர் சாலையில் உள்ள,
தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பெற்றுக் கொள்ளலாம்; தபால்
மூலமாகவும் பெற்றுக் கொள்ளலாம். தொழிலாளர் சட்டங்களும், நிர்வாகவியல்
சட்டமும் என்ற, ஓராண்டு பகுதி நேர படிப்பு, அரசு அனுமதி பெறப்பட்டதும்,
துவக்கப்பட உள்ளது.
இப்படிப்புக்கான வகுப்புகள், சனிக்கிழமை மாலை மற்றும் ஞாயிற்றுக்கிழமை
நடைபெறும்.கல்வி நிலைய தொலைபேசி எண்: 044- 2844 0102 / 2844 5778
No comments:
Post a Comment