கோடை விடுமுறை முடிந்து, நாளை (20ம் தேதி) கலை மற்றும் அறிவியல்
கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன. முதலாமாண்டு மாணவர்களுக்கு, ஜூலை, முதல்
வாரத்தில் வகுப்புகள் துவங்குகின்றன.
தமிழகத்தில், 62 அரசு கலை மற்றும்
அறிவியல் கல்லூரிகள், 133 அரசு உதவி பெறும் கல்லூரிகள், 438 சுயநிதி
கல்லூரிகள் செயல்படுகின்றன. இதில், லட்சக்கணக்கான மாணவர்கள், கல்வி பயின்று
வருகின்றனர். கடந்த மே மாதம், கல்லூரிகளில் தேர்வுகள் முடிந்து, கோடை
விடுமுறை துவங்கியது. தற்போது, 65 நாட்களுக்கு பின், நாளை, கல்லூரிகள்
திறக்கப்பட உள்ளன.
அரசு மற்றும் அரசு உதவி பெறும், சுயநிதி கல்லூரிகளில், முதலாமாண்டு
மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விற்பனை முடிந்த நிலையில், தற்போது மாணவர்
சேர்க்கைக்கான கலந்தாய்வு நடந்து வருகிறது. முதலாமாண்டு மாணவர்களுக்கு,
ஜூலை, முதல் வாரத்தில் வகுப்புகள் துவங்குகின்றன.
No comments:
Post a Comment