குரூப்-4 தேர்வில், தேர்வு பெற்ற 100 பேருக்கு, நேற்று கலந்தாய்வு நடத்தி, பணி ஒதுக்கீட்டு ஆணையை, டி.என்.பி.எஸ்.சி., வழங்கியது.
கடந்த ஆண்டு நடந்த குரூப்-4 தேர்வில் தேர்வு பெற்றவர்களுக்கு,
படிப்படியாக கலந்தாய்வு நடத்தி, பணி ஒதுக்கீட்டு ஆணையை, தேர்வாணையம் வழங்கி
வந்தது. இதில், 100 பேருக்கு, ஏற்கனவே, பணியிடங்களை ஒதுக்கி, தேர்வாணையம்
உத்தரவிட்டது.
எனினும், வருவாய் உள்ளிட்ட பல்வேறு துறைகளில், பணியில் சேரச்
சென்றவர்களிடம், "காலியிடம் இல்லை" என அந்தந்த துறை அதிகாரிகள்
தெரிவித்தனர். இதையடுத்து, சம்பந்தப்பட்ட தேர்வர்களை, நேற்று மீண்டும்
அழைத்து, வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு, கலந்தாய்வு நடத்தி,
புதிய பணி ஒதுக்கீட்டு ஆணையை, தேர்வாணையம் வழங்கியது.
No comments:
Post a Comment