மதுரையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக பள்ளிகளின்
துவக்க நேரத்தை மாற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட ஆட்சியர் அன்சுல்
மிஸ்ரா அறிவித்துள்ளார்.
மதுரையில் காலை நேரத்தில் பள்ளி செல்லும் மாணவர்கள், பள்ளி
வாகனங்கள், வேலைக்கு செல்வோர் என அனைவரும் ஒரே நேரத்தில் செல்வதால் கடும்
போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியரின்
கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
நெரிசலை தவிர்ப்பதற்காக, மதுரை மாவட்ட ஆட்சியர் அன்சுல்
மிஸ்ரா மதுரையில் உள்ள 61 பள்ளிகளின் துவக்க நேரத்தை காலை 8:30 மணிக்கு
மாற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
No comments:
Post a Comment