தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு, இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தை,
அரசு செயல்படுத்தி வருகிறது. பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு, இதுவரை இலவச
லேப்டாப் வழங்காததால், ஏமாற்றத்தில் உள்ளனர்.
தமிழக அரசின் சார்பில்,பள்ளி
மாணவர்களுக்கு இலவச கல்வி பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. பிளஸ் 2
மாணவர்களுக்கு கடந்த ஆண்டு தேர்வு முடிவுகள் வெளியாகி, மதிப்பெண் சான்றிதழ்
வழங்கும் போது, இலவச லேப்டாப் வழங்கப்பட்டது. தற்போது பிளஸ் 2 முடித்த
மாணவர்கள், மதிப்பெண் சான்றிதழ் பெற்று, கல்லூரிகளில் சேர்ந்து
வருகின்றனர்.
ஆனால் இது வரை இந்த மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கவில்லை. இதனால் இவர்கள்
ஏமாற்றம் அடைந்துள்ளனர். கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "பிளஸ் 2
முடித்த மாணவர்களுக்கு,இது வரை இலவச லேப்டாப் வழங்கவில்லை. அரசும் இது
பற்றி எந்த தகவலும் தரவில்லை. பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளிடமிருந்தும்
எந்த தகவலும் வரவில்லை" என்றார்.
No comments:
Post a Comment