ஆசிரியரிடம் லஞ்சம் வாங்கிய, தொடக்க கல்வி அலுவலக கிளார்க்கை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர்.
வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அரசு பள்ளி இடை நிலை ஆசிரியராக சிவாஜி பணிபுரிகிறார். இவர் திறந்த வெளி பல்கலையில், பி.எட்., படித்து வந்தார். பி.எட்., படிக்க வகுப்பறை பயிற்சி பெற வேண்டும்.
இதற்கு அனுமதி பெற சிவாஜி, ஜோலார்பேட்டை உதவி தொடக்க கல்வி அலுவலகத்தில் விண்ணப்பித்தார். அலுவலக கிளார்க் சாரதி, 34, சிவாஜியிடம், 2,000 ரூபாய் லஞ்சம் கொடுத்தால், அனுமதி வாங்கித் தருவதாக கூறினார். சிவாஜி, 1, 750 ரூபாய் லஞ்சம் கொடுக்க சம்மதித்தார்.
இது குறித்து சிவாஜி, வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸில் புகார் செய்தார். போலீஸாரின் ஆலோசனைப்படி நேற்று, ஜோலார்பேட்டை உதவி தொடக்க கல்வி அலுவலகத்துக்கு சென்ற சிவாஜி, 1, 750 ரூபாயை, சாரதியிடம் கொடுத்தார்.
மறைந்திருந்து கண்காணித்த லஞ்ச ஒழிப்பு பிரிவு டி.எஸ்.பி., பாலசுப்பிரமணியன், இன்ஸ்பெக்டர் பழனி ஆகியோர் தலைமையிலான போலீஸார் சாரதியை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
No comments:
Post a Comment