எம்.ஜி.ஆர்., திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில்,
புதிதாக துவக்கப்பட்ட, நவீன தொழில் நுட்ப பட்டயப் படிப்பில், சேர
விரும்புவோரிடமிருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சென்னை, தரமணியில் உள்ள,
எம்.ஜி.ஆர்., அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம்,
கடந்த, 50 ஆண்டுகளாக, தமிழக அரசின், செய்தி மக்கள் தொடர்புத் துறையின்
கீழ், செயல்பட்டு வருகிறது.
இந்நிறுவனத்தில், இந்தியாவிலே முதன் முறையாக, திரைத் துறையின்
மாற்றத்திற்கேற்ப, புதிய தொழில் நுட்பங்களை பயிற்றுவிக்கும் விதமாக, வரும்
கல்வியாண்டிலிருந்து, உயிர்ப்பூட்டல் (Diploma in Animation and Multimedia
Technology) மற்றும் காட்சிப்பயன் (Diploma in 3D Animation and Graphics)
என, இரண்டு பாடத்திட்டங்கள் துவக்கப்பட உள்ளன.
இப்பாடப்பிரிவுகளில், சேர விரும்பும் மாணவ, மாணவியர், இதற்கான விண்ணப்பப் படிவங்களை, தமிழக அரசின், www.tn.gov.in என்ற இணையதள முகவரியில், வரும், 5ம் தேதியிலிருந்து, பதிவிறக்கம் செய்து, விண்ணப்பிக்கலாம்.
No comments:
Post a Comment