நேற்று ஒரே நாளில், ஒரு லட்சம் டி.இ.டி., விண்ணப்பங்கள் விற்பனை
ஆகியுள்ளன. கோவை, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, நாமக்கல் ஆகிய
மாவட்டங்களில், அதிகளவில், விண்ணப்பங்கள் விற்பனை ஆனதாக கூறப்படுகிறது.
பள்ளிகளில் இருந்து, புள்ளி விவரங்கள் பெற வேண்டியிருப்பதால், இன்று தான்
விவரம் கிடைக்கும் என, டி.ஆர்.பி., அதிகாரிகள் தெரிவித்தனர்.
வரும் ஆகஸ்ட், 17, 18 தேதிகளில்,
டி.இ.டி., தேர்வுகள் நடக்கின்றன. இதற்கான விண்ணப்ப விற்பனை, நேற்று,
மாநிலம் முழுவதும் உள்ள, 2,500 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் துவங்கின.
சென்னையில், 21 பள்ளிகளில், விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டன.
பல்வேறு மையங்களிலும், பட்டதாரிகள், ஆர்வத்துடன், விண்ணப்பங்களை
பெற்றுச் சென்றனர். சென்னை மாவட்டத்தில், டி.இ.டி., முதல் தாள் (இடைநிலை
ஆசிரியர் பணிக்கானது) தேர்வுக்கு, 2,107 பேரும், இரண்டாள் தாள் (பட்டதாரி
ஆசிரியர் பணிக்கானது) தேர்வுக்கு, 3,517 பேரும், விண்ணப்பங்களை பெற்றுச்
சென்றனர். இரு தாள்களும் சேர்த்து, 5,624 விண்ணப்பங்கள், விற்பனை ஆகின.
பள்ளிகளில் இருந்து, புள்ளி விவரங்கள் பெற வேண்டியிருப்பதால், இன்று
தான் விவரம் கிடைக்கும் என, டி.ஆர்.பி., அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும்,
ஒரு லட்சம் விண்ணப்பங்கள் விற்பனை ஆகியிருக்கலாம் என, கூறப்படுகிறது.
No comments:
Post a Comment