பி.இ.,இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கு, இதுவரை, 26 ஆயிரம் விண்ணப்பங்கள் மட்டுமே வந்துள்ளன.
பாலிடெக்னிக், பி.எஸ்.சி., முடித்தவர்களுக்கு, பி.இ., இரண்டாம் ஆண்டு
நேரடி சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், 34 மையங்களில்,மே 21 முதல்
வழங்கப்பட்டது. 40 ஆயிரம் விண்ணப்பங்கள், தொழில் நுட்ப கல்வி இயக்ககத்தால்
அச்சிடப்பட்டு, மையங்களுக்கு அனுப்பப்பட்டன.
கடந்த 12ம் தேதியுடன், விண்ணப்பம் வழங்குவதற்கான காலக்கெடு முடிவடைந்து
விட்டது. கடந்த ஆண்டு, தமிழகம் முழுவதிலுமுள்ள 500க்கும் மேற்பட்ட
கல்லூரிகளிலிருந்து, 65 ஆயிரத்துக்கும் மேல் இடங்கள் ஒதுக்கீடு
செய்யப்பட்டன. கவுன்சிலிங் மூலம் 25 ஆயிரம் என்ற அளவிலேயே இடங்கள்
நிரப்பப்பட்டன. 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள், கல்லூரிகளிடமே,
திரும்ப ஒப்படைக்கப்பட்டன.
No comments:
Post a Comment