"அரசு இசைப்பள்ளியில் சேர்ந்து குரலிசை, வயலின்,
மிருதங்கம், பரதநாட்டியம் பயிற்சி பெற விரும்புவோர் பள்ளி தலைமை ஆசிரியரை
தொடர்பு கொள்ளலாம்" என திருச்சி கலெக்டர் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்ட கலெக்டர் ஜெயஸ்ரீ அறிக்கை:
தமிழக அரசு கலைப்பண்பாட்டுத்துறையின் கீழ், திருச்சி மாவட்ட
அரசு இசைப்பள்ளி கலைப்பண்பாட்டு வளாகம், ஸ்ரீரங்கம் மூலத்தோப்பில் இயங்கி
வருகிறது. இப்பள்ளியில் குரலிசை, நாதஸ்வரம், தவில், தேவாராம்,
பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய இசைப்பயிற்சி கலைகள்
பயிற்றுவிக்கப்படுகின்றன.
இதில், 12 முதல், 25 வயது வரை உள்ள மாணவ, மாணவியர்
சேர்க்கப்படுகின்றனர். குரலிசை, வயலின், மிருதங்கம், பரதநாட்டியப்
பயிற்சிக்கு, 7ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேவாரம்,
நாதஸ்வரம், தவில் ஆகிய கலைகளுக்கு ஆரம்ப கல்வித் தகுதியில் சலுகை உண்டு.
இப்பள்ளியில், காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை முழு நேர
பயிற்சி அளிக்கப்படுகிறது. மூன்று ஆண்டு இசைப்பயிற்சிக்கு பிறகு படிப்பு
சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சிக் கட்டணம் ஆண்டுக்கு 150 ரூபாய்.
மாதந்தோறும் 400 ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.
வெளியூர், உள்ளூர் மாணவர்களுக்கு அரசு விடுதியில் இலவசமாக
தங்கி பயிலவும், பஸ்களில் இலவச பயணச்சலுகை மற்றும் 15 வயதுக்கு மேற்பட்ட
மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள், சீருடை ஆகியவை வழங்கப்படும்.
இசைப்பள்ளியில் பயில விரும்பும் மாணவ, மாணவியர்கள்,
"கலைப்பண்பாட்டு வளாகம், எண்.32, நைட் சாயில், டெப்போ ரோடு, மூலத்தோப்பு,
மேலூர் ரோடு, ஸ்ரீரங்கம், திருச்சி-6" என்ற முகவரியில் உள்ள திருச்சி
மாவட்ட அரசு இசைப்பள்ளியின் தலைமை ஆசிரியரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு
அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment