தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கான, பொறியியல் கலந்தாய்வு, ஜூலை, 1ம்
தேதி துவங்கி, 12 வரை நடக்கிறது. அண்ணா பல்கலையில், தற்போது பொதுப்பிரிவு
மாணவர்களுக்கான கலந்தாய்வு நடந்து வருகிறது.
கடந்த, 21ம் தேதி முதல் நடந்து
வரும் கலந்தாய்வில், 10 ஆயிரம் பேர் வரை, பி.இ., படிப்பில் சேர்ந்துள்ளனர்.
இந்நிலையில், பிளஸ் 2வில், தொழிற்கல்வி படித்த மாணவ, மாணவியர், 5,242
பேர், பி.இ., படிப்பில் சேர விண்ணப்பித்தனர். இவர்களுக்கான கலந்தாய்வை,
ஜூலை, 1 முதல் 12ம் தேதி வரை நடத்த, அண்ணா பல்கலை ஏற்பாடு செய்துள்ளது.
பல்கலை வளாகத்தில் உள்ள ராமானுஜம் கம்ப்யூட்டிங் மையத்தில் நடக்கும் கலந்தாய்வுக்கு, தினமும், 500 பேர் வீதம் அழைக்கப்படுவர்.
No comments:
Post a Comment