முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான, கலந்தாய்வு கால அட்டவணை, நேற்று
வெளியிடப்பட்டது. எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., ஆகிய இளநிலை மருத்துவ
படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதி நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இதை
தொடர்ந்து, எம்.டி., - எம்.எஸ்., -எம்.சிஎச்., உள்ளிட்ட முதுநிலை மருத்துவ
படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதிகளும், சுகாதார துறை இணையத்தில், நேற்று
வெளியிடப்பட்டது.
இம்மாதம், 26ம் தேதி முதல், ஜூலை, 1ம் தேதி வரை, சென்னை, கீழ்ப்பாக்கம்
மருத்துவக் கல்லூரி கலையரங்கில், இக்கலந்தாய்வு நடக்கிறது.
விண்ணப்பதாரர்கள், தங்களின் தரவரிசை, கலந்தாய்வு கட்டணம் உள்ளிட்ட
விவரங்களை, www.tnhealth.org என்ற இணையதளத்தில் பெறலாம்.
No comments:
Post a Comment