அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பாதுகாப்பான மற்றும்
வசதியான பயணத்தை ஏற்படுத்தி தரும் வகையில் நடவடிக்கைகளை எடுப்பவர்கள்
டிரான்ஸ்போர்ட்டேஷன் இன்ஜினியர்கள். இத்துறை சார்ந்த இளநிலை மற்றும்
முதுநிலை படிப்புகள் பல்வேறு கல்லூரிகளில் வழங்கப்படுகின்றன.
ஐ.ஐ.டி., டில்லி
இங்கு எம்.டெக்., மற்றும் பிஎச்.டி.,யில்
டிரான்ஸ்போர்ட்டேஷன் இன்ஜினியரிங் வழங்கப்படுகிறது. பி.இ., பி.எஸ்சி.,
அல்லது பி.டெக். பட்டம் பெற்று ஐ.ஐ.டி., ஜே.இ.இ., நுழைவுத்தேர்வில்
தேர்ச்சி பெற்றவர்கள் இங்கு சேரலாம்.
விவரங்களுக்கு: http://civil.iitd.ac.in/
ஐ.ஐ.டி., உ.பி.
எம்.டெக்.,கில் இந்த படிப்பு உள்ளது. இங்கு பயிலும் மாணவர்கள் கட்டாயமாக ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிக்க வேண்டும்.
விவரங்களுக்கு http://www.iitk.ac.in/
ஐ.ஐ.டி.,காரக்பூர்
இரண்டு வருட முழுநேர எம்.டெக்.,படிப்பு உள்ளது. பி.இ.,
அல்லது பி.டெக்.,பட்டம் பெற்று கேட், ஐ.ஐ.டி., ஜே.இ.இ., நுழைவுத்தேர்வில்
தேர்ச்சி பெற்றவர்கள் இங்கு சேர்க்கப்படுவர்.
விவரங்களுக்கு http://www.iitkgp.ac.in/
அண்ணா பல்கலைக்கழகம், சென்னை
அண்ணா பல்கலைக்கழகத்தின் சிவில் இன்ஜினியரிங் துறை, எம்.இ. பிரிவில் இந்த படிப்பை வழங்குகிறது.
விவரங்களுக்கு http://www.annauniv.edu/Transportation/index.php
No comments:
Post a Comment