அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்கள் இடைநிற்றலை தவிர்க்க, அரசு
கொண்டு வந்த கல்வி உதவித்தொகை திட்டம் முழுமை பெறாமல் உள்ளது.
பொருளாதார வசதியில் பின்தங்கிய
அரசு பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் கல்வியை தவிர்க்க, 10, 11,வகுப்பு
பயிலும் மாணவர்களுக்கு ஆண்டிற்கு ரூ.1,500, 12ம் வகுப்பிற்கு ரூ.2 ஆயிரம்
கல்வி உதவித்தொகை வழங்கும் புதிய திட்டத்தை அரசு கொண்டு வந்தது.
இத்திட்டத்தில் பயன்பெறும் மாணவர்கள் பெயரில் தேசிய வங்கிகளில் வங்கி
கணக்கு துவங்கி, அதில் செலுத்த பள்ளிக் கல்வித்துறைக்கு அரசு
அறிவுறுத்தியது. இத்திட்டம் பெரும்பாலான மாவட்டத்தில் முழுமை பெறாமல்
கிடப்பில் கிடப்பதாக கல்வித்துறையினர் தெரிவிக்கின்றனர்.
தலைமை ஆசிரியர்கள் மாணவர்களின் ஜீரோ பேலன்ஸ் கணக்கு பட்டியலை சரியாக
தராமலும், இந்த சேமிப்பு கணக்கு திட்டத்தை துவங்க ,சில தேசிய வங்கிகள்
மறுப்பதாலும் திட்டம் முழுமை பெறவில்லை.
ஒவ்வொரு மாவட்டத்திலும் இத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட
நிதி,மாணவர்களின் வங்கி கணக்கில் செலுத்த முடியாமல் உள்ளது.
கல்வித்துறையினர் கூறுகையில், "எந்த புது திட்டமாக இருந்தாலும்,
சம்பந்தப்பட்டோருக்கு சேராத வரை முழுமை பெற இயலாது. இடைநிற்றல் கல்வி
உதவித்தொகை திட்டம் கடந்த இரண்டு ஆண்டுகளாக முழுமை பெறாமல் கிடப்பில்
உள்ளது.
மாணவர்களும் வங்கி சேவையை எளிதில் பயன்படுத்தலாம் என்கின்றனர். ஆனால்,
அரசு கொண்டு வந்த புதிய திட்டம் கிடப்பில் கிடப்பதால் தினமும்
அவதிப்படுகிறோம்" என்றார்.
No comments:
Post a Comment