மெர்ச்சன்ட் நேவி என்பது லட்சக்கணக்கான டன் கொள்ளவுகளைக் கொண்ட
டேங்கர்கள், கார்கோ மற்றும் பயணிகள் கப்பல்களைக் குறிக்கிறது. கப்பற்படை
என்பது ராணுவத்தோடு தொடர்புடையது. ஆனால் மெர்ச்சன்ட் நேவி என்பது வணிக
ரீதியாக நடத்தப்படும் கப்பல் போக்குவரத்தைக் குறிக்கிறது. மெர்ச்சன்ட்
நேவியை நடத்தும் நிறுவனங்கள் திறமை வாய்ந்த கப்பல் பணியாளர்களை வேலைக்கு
வைத்துக் கொள்கின்றன.
இந்தியாவில் ஷிப்பிங்
கார்ப்பரேசன் ஆப் இந்தியா, கிரேட் ஈஸ்டர்ன் ஷிப்பிங், எஸ்ஸார், சவுகுளே
ஷிப்பிங் ஆகியவை இது போன்ற மெர்ச்சன்ட் நேவியை நடத்துகின்றன. பன்னாட்டு
வாணிபத்தில் மெர்ச்சன்ட் நேவி தான் முக்கிய பங்காற்றுகிறது.
இத்துறையில் மூன்று முக்கிய பணிகளுக்கு நபர்கள் எடுத்துக்
கொள்ளப்படுகிறார்கள். கப்பலின் மேல்தளம், இன்ஜின், சேவைப்பிரிவு
ஆகியவற்றுக்கு ஏராளமான நபர்கள் எப்போதும் தேவைப்படுகிறார்கள். கேப்டன்,
தலைமை அதிகாரி, இரண்டு மற்றும் மூன்றாம் நிலை அதிகாரி, பிற இளநிலை
அதிகாரிகளுக்கும் முக்கிய பணிகள் உள்ளன.
கடற்பயணத்தை வழிநடத்தவும், கார்கோ மற்றும் பயணிகளை
பாதுகாக்கவும் இவர்கள் உதவுகிறார்கள். சீப் இன்ஜினியர், ரேடியோ ஆபீசர்,
எலக்ட்ரிகல் ஆபீசர், ஜூனியர் இன்ஜினியர் ஆகியோர் இன்ஜின் பிரிவில்
பணியாற்றுகிறார்கள். கிச்சன், லாண்டரி, மருத்துவச் சேவை மற்றும் பிற
சேவைகளுக்கானவர்கள் சேவைப் பிரிவில் பணியாற்றுகிறார்கள்.
மெர்ச்சன்ட் நேவி பணிகளில் கவர்ச்சிகரமான ஊதியம்
தரப்படுகிறது. இலவச உணவு, தங்குமிடம், சம்பளத்தோடு கூடிய விடுமுறை, இலவச
பயணப்படி, குடும்பத்திற்கான சலுகைகள் ஆகியவை மெர்ச்சன்ட் நேவி பணிகளில்
கிடைக்கிறது. இது தவிர போனஸ், விடுமுறைப்படி போன்றவைகளும் தரப்படுகின்றன.
வருமான வரி இல்லாத தொகையாக இவற்றைப் பெற முடிகிறது என்பது கூடுதல் தகவல்.
நேவி படிப்புகளில் டிப்ளமோ, இளநிலை, முதுநிலை நாடிகல்
சயின்ஸ், மரைன் இன்ஜினியரிங், கேட்டரிங் போன்ற படிப்புகளைப் படிப்பவர்கள்
மெர்ச்சன்ட் நேவி பணிகளில் சேரலாம்.
No comments:
Post a Comment