பிளஸ் 2 சிறப்பு உடனடி தேர்வு நாளை (19ம் தேதி) துவங்க உள்ள நிலையில்,
கோவை வருவாய் மாவட்டத்தில் ஆறு மையங்களில் 2,131 மாணவர்கள் பங்கேற்க
உள்ளனர்.
சிறப்பு உடனடித் தேர்வில்
பங்கேற்க உள்ள மாணவர்களுக்கான (தனித் தேர்வர்கள்) ஹால் டிக்கெட், புரூக்
பீல்டு ரோட்டில் உள்ள தேவாங்க மேல்நிலைப்பள்ளியில் நேற்று
வினியோகிக்கப்பட்டது. நேற்று மாலை வரை 361 பேர் ஹால் டிக்கெட் பெற்று
சென்றனர்; இன்று மாலை வரை பெற்றுக் கொள்ளலாம்.
பள்ளிகள் மூலம் தேர்வு எழுதுபவர்கள், அந்தந்த பள்ளி தலைமை
ஆசிரியர்களிடம் இருந்து ஹால் டிக்கெட்டை பெற்றுக் கொள்ளலாம். நாளை தமிழ்
முதல் தாள், 20ம் தேதி தமிழ் இரண்டாம் தாள், 21ம் தேதி ஆங்கில முதல்தாள்,
22ம் தேதி ஆங்கில இரண்டாம் தாள், 24ம் தேதி இயற்பியல் மற்றும் பொருளாதாரம்,
25ம் தேதி கணிதம், விலங்கியல், மைக்ரோபயாலஜி, 26ம் தேதி வணிகவியல் மற்றும்
புவியியல், 27ம் தேதி வேதியியல் மற்றும் கணக்குபதிவியல், 28ம் தேதி
உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம், 29ம் தேதி கணினி அறிவியல்,
உயிர் வேதியியல், ஜூலை 1ம் தேதி அரசியல் அறிவியல், நர்சிங், புள்ளியல்
உள்ளிட்ட தேர்வுகள் நடக்க உள்ளன.
கோவை மாவட்டத்தில், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வால்பாறை,மாரியம்மாள்
பெண்கள் மேல்நிலைப்பள்ளி பொள்ளாச்சி, புனித மைக்கேல் பள்ளி டவுன்ஹால்,
தேவாங்க மேல்நிலைப்பள்ளி புரூக் பீல்டு ரோடு, பி.எஸ்.ஜி சர்வஜனா பீளமேடு,
என்.எஸ்.எஸ்.டி வடவள்ளி உள்ளிட்ட ஆறு மையங்களில் பிளஸ் 2 சிறப்பு உடனடி
தேர்வு நடக்க உள்ளது.
No comments:
Post a Comment