மத்திய அறிவியல் மற்றும் தொழிற்சாலை ஆராய்ச்சி கவுன்சிலின் முக்கிய
ஆய்வகங்களுள் ஒன்றான, மத்திய அறிவியல் உபகரணங்கள் கல்வி நிறுவனம் 1959ம்
ஆண்டு தொடங்கப்பட்டு சண்டிகரில் இயங்கி வருகிறது.
அறிவியல் மற்றும்
தொழிற்சாலை உபகரணங்கள் தொடர்பான ஆராய்ச்சி, வடிவமைப்பு மற்றும் மேம்பாடு
சம்பந்தமான பணிகளை இந்நிறுவனம் மேற்கொள்கிறது.
அறிவியல் மற்றும் உபகரண சாதனங்கள் வடிவமைப்பு மற்றும்
மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு கண்காணிப்பாளராக இருந்து, அந்தப் பணிகளின்
ரிப்பேர், பராமரிப்பு மற்றும் கணக்கிடுதல் போன்ற சேவைகளை இது வழங்குகிறது.
பி.இ/ எம்.இ/ எம்.டெக்., டிப்ளமோ, ஐ.டி.ஐ., போன்ற
படிப்புகளை முடித்தவர்கள், 10 மற்றும் 12ம் வகுப்பு தேறியவர்களுக்கு
இந்நிறுவனத்தில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
மேலும் விபரங்களுக்கு www.csio.res.in
No comments:
Post a Comment