சென்னை மருத்துவக் கல்லூரியில், குழந்தைகள் நல மருத்துவம் தொடர்பான, புதிய மருத்துவப் படிப்புகள் துவங்கப்படுகின்றன.
சென்னை மருத்துவக் கல்லூரியில்,
குழந்தைகள் தீவிர சிகிச்சை மற்றும் அவசர சிகிச்சை தொடர்பான, ஓராண்டு
முதுநிலை படிப்புகள் துவங்கப்படுகின்றன. தலா, இரண்டு இடங்கள் கொண்ட
இப்படிப்புகளில் சேர, எம்.டி., - குழந்தைகள் நலம் அல்லது டிப்ளமோ இன்
நேஷனல் போர்டு படிப்பில் தேர்ச்சி அடைந்தோர் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பத்தை, www.tnmmu.ac.in என்ற
இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட
விண்ணப்பத்துடன், The Registrar, Tamilnadu Dr.M.G.R Medical
Universityஎன்ற பெயரில் எடுக்கப்பட்ட, 1,000 ரூபாய்க்கான காசோலையை இணைத்து,
இயக்குனர், அரசு குழந்தைகள் நல மருத்துவமனை, எழும்பூர், சென்னை - 8 என்ற
முகவரியில், நாளை மாலை, 5:00 மணிக்குள், சமர்பிக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்களுக்கு, வரும், 27ம் தேதி நடக்கும் நுழைவுத் தேர்வு
முடிவின்படி, இப்படிப்புகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். சென்னை
மருத்துவக் கல்லூரி முதல்வர், கனகசபை, வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்
இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment