எம்.பி.ஏ., பட்டப் படிப்பில் சேர தேர்வானோர் விவரம், சென்னை பல்கலைக்கழக
இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, சென்னை பல்கலைக்கழகம்
வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
நடப்பு கல்வியாண்டில், எம்.பி.ஏ., படிப்பில் சேர, நூற்றுக்கும்
மேற்பட்ட, மாணவர் விண்ணப்பித்திருந்தனர். இதில், "டான்செட்" மற்றும்
மதிப்பெண் அடிப்படையில், தேர்வு பெற்ற மாணவர்களின் விவரம், www.unom.ac.in என்ற பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வு பெற்ற மாணவர் மற்றும் காத்திருப்போர் பட்டியலில் உள்ள
மாணவருக்கு, வரும், 10 மற்றும் 11ம் தேதிகளில், கலந்தாய்வு நடக்க உள்ளது.
மேலும் தகவலுக்கு, 044-2539 9562, 044-2539 9531 ஆகிய தொலைபேசி எண்களை
தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment