ஆசியாவிலேயே முதல் வானிலை கல்வி நிறுவனமாக ஏற்படுத்தப்பட்டது தான்
வான்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான இந்திய கல்வி நிறுவனம்.
உலகிலேயே இத்துறை
தொடர்பாக, முழு அளவிலான இளநிலை, முதுநிலை மற்றும் முனைவர் பட்ட நிலைகளிலான
படிப்புகளை வழங்கத் தொடங்கிய, முதல் ஆராய்ச்சி நிறுவனம் இதுதான்.
திருவனந்தபுரத்தில் உள்ள இக்கல்வி நிறுவனம், நிகர்நிலை பல்கலை அந்தஸ்தில்
செயல்பட்டு வருகிறது.
இந்தியாவின், தகுதி வாய்ந்த இளைஞர்களுக்கு தேவையான
பயிற்சிகளை அளித்து, இஸ்ரோவில் பணிபுரியும் அளவிற்கு அவர்களை
தகுதிப்படுத்துவதே இதன் பிரதான நோக்கம். மத்திய விண்வெளி துறையின் கீழ்,
ஒரு தன்னாட்சி அமைப்பாக இது செயல்படுகிறது.
இந்நிறுவனத்தின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், விருப்பமான துறையில் ஆராய்ச்சியை மேற்கொள்ள ஊக்கமளிக்கப்படுகிறார்கள்.
விபரங்களுக்கு www.iist.ac.in காணவும்.
No comments:
Post a Comment