பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், மாநில அளவில், இரண்டு மற்றும்
மூன்றாமிடம் பெற்ற, மாணவ, மாணவியர், முதல்வரிடம் பரிசு பெற முடியாததால்,
கடும் ஏமாற்றமடைந்தனர். முதல்வர் பரிசு வழங்குவார் எனக்கூறி, அதிகாரிகள்
நாள் முழுக்க காக்க வைத்து, திருப்பி அனுப்பியதால், பெற்றோர் கடும்
அதிருப்தி அடைந்தனர்.
இதுகுறித்து, தினமலர் நாளிதழில், விரிவான செய்தி வெளியானது. இதை அறிந்த
முதல்வர், மீண்டும் அவர்களுக்கு, பரிசு வழங்கும் விழா நடத்த
உத்தரவிட்டுள்ளார்; இவ்விழா, 26ம் தேதி, நடைபெற உள்ளது. பிளஸ் 2 மற்றும்
10ம் வகுப்பில், தமிழை முதல் பாடமாகப் படித்து, பொதுத்தேர்வில், மாநில
அளவில், முதல், மூன்று இடங்களைப் பிடிக்கும், மாணவ, மாணவியருக்கு,
ரொக்கப்பரிசு வழங்குவதுடன், அவர்களின், உயர்கல்வி செலவை, தமிழக அரசே
ஏற்கிறது.
எண்ணிக்கை அதிகம்: ஒவ்வொரு ஆண்டும், முதல், மூன்று
இடங்களைப் பிடிக்கும், மாணவ, மாணவியர், சென்னை கோட்டைக்கு அழைத்து
வரப்பட்டு, அவர்களுக்கு, முதல்வர், பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்குவார்.
வழக்கமாக, இரண்டு வகுப்பிலும் சேர்த்து, முதல் மூன்று இடங்களைப்
பிடிக்கும், மாணவர்கள் எண்ணிக்கை, 25க்குள் இருக்கும். ஆனால், இம்முறை,
10ம் வகுப்பில், 198 மாணவர்கள், பிளஸ் 2 தேர்வில், 13 மாணவர்கள், முதல்,
மூன்று இடங்களைப் பிடித்தனர். அனைவருக்கும், முதல்வர் பரிசு வழங்கும் விழா,
கடந்த, 19ம் தேதி காலை, கோட்டையில் நடைபெறும், என,
அறிவிக்கப்பட்டிருந்தது. மாணவ, மாணவியர், பல்வேறு மாவட்டங்களிலிருந்து,
அழைத்து வரப்பட்டிருந்தனர்.
ஏமாற்றம்: ஆனால், காலையில் விழா நடைபெறவில்லை. பகல்,
2:30 மணிக்கு, முதல்வர் ஜெயலலிதா, பிளஸ் 2 வகுப்பில், முதல், மூன்று
இடங்களைப் பிடித்த, 13 மாணவர்கள், 10ம் வகுப்பில், முதலிடம் பிடித்த,
ஒன்பது பேருக்கு மட்டும் பரிசு வழங்கினார். பத்தாம் வகுப்பு தேர்வில்,
இரண்டாமிடம் பிடித்த, 52 மாணவர்கள், மூன்றாமிடம் பிடித்த, 137
õணவர்களுக்கு, கல்வி அமைச்சர் வைகைச்செல்வன் பரிசு வழங்குவார் என,
அதிகாரிகள் அறிவித்தனர். அவரும் மாலை வரை வரவில்லை. இதனால், மாணவர்கள்
மற்றும் பெற்றோர் கடும் அதிருப்தி அடைந்தனர். லர் பரிசு வேண்டாம் என
புறப்பட்டு சென்றனர். இறுதியாக, அதிகாரிகள் பரிசு மற்றும் சான்றிதழ்களை
வழங்கினர்.
தினமலர் செய்தி எதிரொலி: இதுகுறித்து, தினமலர்
ளிதழில், 20ம் தேதி விரிவாக செய்தி வெளியிடப்பட்டது. மாணவ, மாணவியர்
மற்றும் அவர்களின் பெற்றோர் அதிருப்தியிலிருக்கும் தகவல், முதல்வருக்கு
தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட மாணவர்களை அழைத்து,
மீண்டும் விழா நடத்தும்படியும், அதில், தான் கலந்து கொள்வதாகவும்,
அதிகாரிகளிடம் ஜெ., தெரிவித்தார். அதை ஏற்று, பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு
பொதுத்தேர்வில், முதல் மூன்று இடங்களைப் பிடித்த, மாணவ, மாணவியருக்கு,
மீண்டும் பரிசு வழங்கும் விழா நடத்த, கல்வித்துறை அதிகாரிகள் ஏற்பாடு
செய்துள்ளனர்.
இவ்விழா, 26ம் தேதி காலை, சென்னை, தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ளது.
விழாவில், அனைத்து மாணவ, மாணவியருக்கும், முதல்வர், தன் கையால் பரிசு வழங்க
உள்ளார். இத்தகவலை, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
சிறப்பு பரிசு: பெரும்பாலான மாணவ, மாணவியருக்கு,
ஏற்கனவே பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதால், அவர்களுக்கு
சிறப்புப் பரிசு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பரிசு விவரத்தை, அதிகாரிகள்,
சஸ்பென்சாக வைத்துள்ளனர். கடந்த முறை போன்று, இம்முறை குளறுபடி
ஏற்படாமலிருக்க, விழா ஏற்பாடுகளை கவனிக்கும் பணியில், அனைத்து கல்வித்துறை
இயக்குனர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஒவ்வொரு இயக்குனருக்கும், ஆறு
மாவட்டங்கள் பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது.
அவரது உத்தரவை, சம்பந்தப்பட்ட கல்வித்துறை அதிகாரிகள் செயல்படுத்த
வேண்டும். அனைத்து மாணவ, மாணவியரையும், சென்னை வரவழைத்து, பாதுகாப்பாக தங்க
வைத்து, விழா முடிந்து, அவர்கள் ஊர் திரும்ப, தேவையான அனைத்து
ஏற்பாடுகளையும், கல்வித்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
No comments:
Post a Comment