பி.இ., விளையாட்டுப் பிரிவு சேர்க்கை கலந்தாய்வில், 494 இடங்கள் நிரம்பின.
விளையாட்டுப் பிரிவில், 500 இடங்கள் உள்ளன. இதை நிரப்ப, நேற்று
முன்தினம் நடந்த கலந்தாய்வில், 420 இடங்கள் நிரம்பின. மீதமுள்ள, 80 இடங்களை
நிரப்ப, இரண்டாவது நாளாக நேற்று, அண்ணா பல்கலை வளாகத்தில், கலந்தாய்வு
நடந்தது. இதில், 74 இடங்கள் நிரம்பின. ஆறு இடங்கள் நிரம்பவில்லை.
இந்த இடங்கள், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கானது என, அண்ணா பல்கலை
அதிகாரிகள் தெரிவித்தனர். எஸ்.சி., - எஸ்.டி., பிரிவு மாணவர்கள்
மேம்பாட்டிற்காக, தமிழக அரசு, பல கோடி ரூபாயை செலவு செய்வதாக கூறுகிறது.
ஆனாலும் இந்த பிரிவில் இருந்து, விளையாட்டில் சாதிக்க, ஒருவர் கூட இல்லை
என்பது, இந்த கலந்தாய்வு மூலம், வெட்ட வெளிச்சமாகி உள்ளது.
எஸ்.சி., - எஸ்.டி., பிரிவைச் சேர்ந்த மாணவர்களில், திறமையான மாணவ,
மாணவியரை அடையாளம் கண்டு, விளையாட்டுகளில் அவர்களை மேம்படுத்த, அரசு
நடவடிக்கை எடுத்தால் தான், அவர்களுடைய ஒதுக்கீட்டு இடங்கள் முழுமையாக
நிரம்பும் என, பல்கலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment