"குரூப்-4 தேர்வில், புரோக்கர்கள் தலையீடு இருந்தால், தமிழ்நாடு அரசு
பணியாளர் தேர்வாணையத்தில், வெளிப்படையாக புகார் தரலாம். புரோக்கர்கள்
சிறையில் தள்ளப்படுவர்" என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர்,
நவநீதகிருஷ்ணன் கூறினார்.
தஞ்சாவூரில், அவர் அளித்த பேட்டி: தற்போது, "குரூப்-4" தேர்வுக்கு,
தேர்வாளர்களிடம் நல்ல வரவேற்புள்ளது. ஆன்-லைன் மூலம், லட்சக்கணக்கான
விண்ணப்பங்கள் வந்துள்ளன. மேலும், அதிகளவில் விண்ணப்பங்கள் வரும் என,
எதிர்பார்க்கிறோம். "குரூப்-4" தேர்வு, நியாயமான முறையில் நடக்க, அனைத்து
நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
தேர்வு வெளிப்படையாக, நடக்கும். இதில், புரோக்கர்கள் பணமோ, பொருளோ
கேட்டால், தயக்கமின்றி புகார் தரலாம். புரோக்கர்கள் கைது செய்யப்பட்டு,
சிறையில் அடைக்கப்படுவர். "குரூப்-2" தேர்வில், கேள்வித்தாள், "அவுட்" ஆனது
குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எனவே, அதுபற்றி கருத்து கூற முடியாது. எதிர்காலத்தில், கேள்வித்தாள்,
"அவுட்&' ஆகாத வகையில், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு
உள்ளன. இவ்வாறு, அவர் கூறினார்.
No comments:
Post a Comment