எம்.ஜி.ஆர்., அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி
நிறுவனத்தில், முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான காலக்கெடு, அடுத்த
மாதம், 5ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
சென்னை தரமணியில் உள்ள,
எம்.ஜி.ஆர்., அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம்,
தமிழக அரசின், செய்தி மக்கள் தொடர்பு துறை கீழ் இயங்கி வருகிறது.
மேல்நிலைக் கல்வியில், தேர்ச்சி பெற்ற, மாணவ, மாணவியர், ஒளிப்பதிவு,
ஒலிப்பதிவு, ஒலிப்பொறியியல், படம் பதனிடுதல், படத்தொகுப்பு, ஆகிய நான்கு
பிரிவுகளிலும், பட்டப்படிப்பு முடித்த, மாணவ, மாணவியர், இயக்குதல்,
அனிமேஷன், மல்டி மீடியா தொழில்நுட்பம், 3டி அனிமேஷன் மற்றும் கிராபிக்ஸ்,
ஆகியப் பிரிவுகளிலும் சேர, நடப்பு கல்வியாண்டில், முதலாம் ஆண்டு மாணவர்
சேர்க்கை நடைபெறுகிறது.
விண்ணப்பங்கள் பெறவும், பூர்த்தி செய்து வழங்குவதற்கான, கால அவகாசம்,
அடுத்த மாதம், 5ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. விண்ணப்பப்
படிவங்களை, www.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment