பெண் குழந்தைகளின், பள்ளி இடை நிற்றலை தடுக்கும் விதமாக, 14 கோடி ரூபாய்
ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டு ஒதுக்கப்பட்ட நிதியை விட,
இந்தாண்டு ஒதுக்கீடு அதிகம்.
கிராமங்களில் நிலவும் வறுமை
காரணமாக, பெண் குழந்தைகள் பலரும், படிப்பை பாதியில் நிறுத்தி விடுகின்றனர்.
குறிப்பாக, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச்
சேர்ந்த குழந்தைகள், ஆரம்பப் பள்ளி அளவிலேயே, படிப்பை நிறுத்தி வந்தனர்.
இப்பிரச்னையை தவிர்க்கும் விதமாகவும், பெண் குழந்தைகளிடையே கல்வியறிவு
அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவும், 3ம் வகுப்பு முதல், 5ம் வகுப்பு வரை
பயிலும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்புகளைச்
சேர்ந்த, மாணவியர் ஒவ்வொருவருக்கும், ஆண்டுக்கு, 500 ரூபாயும், 6ம்
வகுப்பில் பயிலும் மாணவியர் ஒவ்வொருவருக்கும், ஆண்டுக்கு, 1,000 ரூபாயும்,
ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ், ஆண்டுதோறும், 7 கோடி ரூபாய் ஒதுக்கீடு
செய்யப்பட்டு வந்தது. இருப்பினும், அதிக எண்ணிக்கையிலான மாணவியர் பயன் பெற
வேண்டும் என்பதற்காக, 2012 -13ம் நிதியாண்டில், திட்டத்துக்கான ஒதுக்கீடு,
இரண்டு மடங்குக்கும் மேலாக உயர்த்தப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ், 2012 -13ம் நிதியாண்டில், 2,32,986 மாணவியர்
பயனடைந்தனர். இந்தாண்டு, இத்திட்டத்துக்கென, 14.34 கோடி ரூபாய் ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment