"கிராமங்களில் பணிபுரியும் மருத்துவருக்கு, 50 சதவீதம் கூடுதல் ஊதியம்
தரப்படும் என்ற அறிவிப்பை, மத்திய அரசு செயல்படுத்த வேண்டும்" என சமூக
சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம், கோரிக்கை விடுத்துள்ளது.
"எம்.பி.பி.எஸ்., முடிக்கும் இளம்
மருத்துவர், கிராமங்களில், ஓராண்டு கட்டாயம் மருத்துவ சேவை செய்தால் தான்,
முதுநிலை படிப்பு படிக்க முடியும்" என மத்திய அரசு, சமீபத்தில்
அறிவித்தது.
இந்த அறிவிப்பை எதிர்த்து, தமிழ்நாடு மருத்துவ மாணவர் கூட்டமைப்பு
சார்பில், சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன், கண்டன ஆர்பாட்டம்
நடந்தது. இதில், சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் ஸ்டான்லி மருத்துவக்
கல்லூரி மாணவர், 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இதுகுறித்து, சமூக சமத்துவத்திற்கான டாக்டர் சங்க மாநில பொதுச் செயலர்
ரவீந்திரநாத் கூறியதாவது: இளம் மருத்துவர், கிராமங்களில், ஓராண்டு மருத்துவ
சேவை புரிவதை, கட்டாயமாக்குவதற்கு பதிலாக, "கிராமங்களில் பணிபுரியும்
மருத்துவருக்கு, பிற மருத்துவரை விட, 50 சதவீதம் கூடுதல் ஊதியம் தரப்படும்"
என்ற அறிவிப்பை, மத்திய அரசு செயல்படுத்த வேண்டும். நாடு முழுவதும்,
மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கையை, அதிகரிக்க வேண்டும். இவ்வாறு, அவர்
கூறினார்.
No comments:
Post a Comment