ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியின், 100 கூடுதல் எம்.பி.பி.எஸ்.,
இடங்களுக்கும், மாணவர் சேர்க்கை நடத்த, இந்திய மருத்துவ கவுன்சில்
(எம்.சி.ஐ.,) ஒப்புதல் வழங்கி உள்ளது.
சென்னை மருத்துவக் கல்லூரியின்,
அதிகரிக்கப்பட்ட, 85 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு, மாணவர் சேர்க்கை நடத்த,
நேற்று முன்தினம், எம்.சி.ஐ., அனுமதி அளித்தது. இதைத் தொடர்ந்து, ஸ்டான்லி
மருத்துவக் கல்லூரியின், 100 கூடுதல் எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கும்,
மாணவர் சேர்க்கை நடத்த, நேற்று, எம்.சி.ஐ., இறுதி ஒப்புதல் அளித்துள்ளது.
இவ்விரு கல்லூரிகளின் முறையே, 165, 150 எம்.பி.பி.எஸ்., இடங்கள், முதல்
கட்ட கலந்தாய்வில் நிரப்பப்பட்டுள்ள நிலையில், 185 கூடுதல் எம்.பி.பி.எஸ்.,
இடங்களும், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரியின், 100
எம்.பி.பி.எஸ்., இடங்களும், இரண்டாம் கட்ட கலந்தாய்வில் நிரப்பப்பட உள்ளன.
No comments:
Post a Comment