போக்குவரத்து மற்றும் சாலை வசதி இல்லாததால், பள்ளிக்கு செல்ல முடியாமல்
உள்ள குழந்தைகளுக்கும், கல்வி வழங்கும் நோக்கில், சர்வ சிக்ஷ அபியான்
திட்டத்தில், "பாதுகாவலர்" - எஸ்கார்டு நியமன முறையை அமல்படுத்த, அரசு
திட்டமிடப்பட்டுள்ளது.
சர்வ சிக்ஷ அபியான் திட்டத்தில்,
மாநிலத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்க, நடுநிலைப் பள்ளிகளில், மாணவர்
எண்ணிக்கையை அதிகப்படுத்த பல முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
மாணவ, மாணவியருக்கு பாட புத்தகம், சீருடை, மதிய உணவு என, அனைத்தும்
இலவசமாக வழங்கப்படுகின்றன. இருப்பினும், மாநிலத்தின் பல இடங்களில், பஸ்,
சாலை வசதி இல்லாத பல கிராமங்கள் உள்ளன. குறிப்பாக, வனங்கள், அதை சார்ந்த
பகுதிகளில் வாழும் ஆதிவாசி, பழங்குடியின கிராமங்களில், வன விலங்கு
அச்சுறுத்தல், போதிய சாலை மற்றும் போக்குவரத்து வசதியின்மை போன்ற பல
காரணங்களால், அங்குள்ள பள்ளி வயதுடைய குழந்தைகளின், "பள்ளிக் கனவு" வெறும்
கனவாகவே இருந்து வருகிறது.
இத்தகைய சூழலில் உள்ளவர்களுக்கும், கல்வி வழங்கும் நோக்கில், சர்வ சிக்ஷ
அபியான் திட்டத்தில், பாதுகாவலர் நியமன முறையை அமல்படுத்த அரசு
திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி, போக்குவரத்து, சாலை வசதி இல்லாத,
பாதுகாவலர்களின் துணையுடன் மட்டுமே, பள்ளிக்கு செல்ல முடியும் என்ற
நிலையில் உள்ள குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வரும் பொறுப்பை, தனி நபர்கள்
வசம் ஒப்படைக்க, அவர்களுக்கு எஸ்.எஸ்.ஏ., மூலம் நிதி வழங்கும் திட்டம்,
நடப்பாண்டு முதல் அமல்படுத்தப்பட உள்ளது என, கூறப்படுகிறது.
No comments:
Post a Comment