சந்தை வணிகத்தை எப்படி நிர்வகிக்கலாம்? என்பது குறித்த, பல சிறப்பு
படிப்புகள் இருக்கின்றன. அவற்றுள் சில்லரை வாணிபம் தொடர்பான நிர்வாகவியல்
குறித்து படிக்கும் படிப்பு தான், சில்லரை வியாபார நிர்வாகம் (ரீடெயில்
மேனேஜ்மென்ட்).
தொழிற்சாலைகளில்
தயார் செய்யப்படும் பொருட்கள், மக்களின் தேவை, தரம், உரிய விளம்பரம்,
திட்டமிடல், விற்பனை என பல பணிகளை கடந்து மொத்த வியாபாரிகளை சென்றடைகிறது.
அவர்களிடமிருந்து சில்லரை வியாபாரிகளுக்கு செல்லும். பின்
வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்படும்.
ஒரு பொருளை தயார் செய்யும் நிறுவனத்தின் வெற்றி என்பது
சில்லரை வியாபாரத்தை பொறுத்தே உறுதி செய்யப்படுகிறது. பொருட்களின்
விற்பனையை அதிகரிப்பதோடு வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல சலுகைகள்,
தள்ளுபடி, இலவசங்களை தருவது சில்லரை வியாபாரத்தின் மார்க்கெட்டிங் நுட்பம்.
சில்லரை வியாபாரத்தில், விற்பனையாளர்களை பணியமர்த்துவது, சரக்குகளை
கையிருப்பில் வைத்தல், அதை பாதுகாத்தல், வியாபார கணக்குகளை நிர்வகித்தல்
உள்ளிட்ட பல்வேறு பணிகள் உள்ளன.
சிறிய கடைகளிலிருந்து, பெரிய சூப்பர் மார்க்கெட் வரை
இந்நடவடிக்கைகள் கடைபிடிக்கப்படும். இந்த துறை நிர்வாகத்தை பொறுத்த வரை,
இரண்டு அடிப்படை விஷயங்கள் உண்டு. ஒன்று, தயாரிப்பாளர்களிடமிருந்து
பொருட்களை வாங்குவது, மற்றொன்று, வாங்கிய பொருட்களை மக்களிடம்
சேர்ப்பது.
ரீடெயில் மேனேஜ்மென்ட் படிப்பு முடித்தவர்கள், ஸ்டோர்
மேனேஜ்மென்ட், ஆன்லைன் வர்த்தகம் உள்ளிட்ட பல துறைகளில் பணி வாய்ப்பை
பெறலாம். உள்நாட்டில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் வாய்ப்புகள் அதிகம்.
பணிபுரியும் நிறுவனம் மற்றும் அனுபவத்தை பொறுத்து ஊதியம் உயரும்.
வெளிநாடுகளில் பெரிய கடைகளில் மேனேஜர் உள்ளிட்ட பணியில் அமரும் வாய்ப்புகள்
உள்ளன.
பயிலும் நிறுவனங்கள்
* பிர்லா மேலாண்மை தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், புதுடில்லி (bimzech.ac.in)
* வெலிங்கர் மேலாண்மை கல்வி நிறுவனம், மும்பை (www.welingkar.org)
* பியர்ல் அகாடமி ஆப் பேஷன், டில்லி (www.pearlacademy.com)
* இந்தியன் ரீடெயில் பள்ளி, புதுடில்லி (www.indianrezailschool.com)
* மெட்ரோபாலிடன் மேலாண்மை கல்வி நிறுவனம், புனே (www.mecindia.com)
* எஸ்.பி.ஜெயின் மேலாண்மை கல்வி நிறுவனம், மும்பை (www.spjimr.org)
* வெலிங்கர் மேலாண்மை கல்வி நிறுவனம், மும்பை (www.welingkar.org)
* பியர்ல் அகாடமி ஆப் பேஷன், டில்லி (www.pearlacademy.com)
* இந்தியன் ரீடெயில் பள்ளி, புதுடில்லி (www.indianrezailschool.com)
* மெட்ரோபாலிடன் மேலாண்மை கல்வி நிறுவனம், புனே (www.mecindia.com)
* எஸ்.பி.ஜெயின் மேலாண்மை கல்வி நிறுவனம், மும்பை (www.spjimr.org)
No comments:
Post a Comment