தூத்துக்குடி மாவட்டத்தில் குழந்தைகளின் வீரதீர செயல்களுக்கான விருதிற்கு விண்ணப்பிக்குமாறு கலெக்டர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து கலெக்டர் ஆஷிஷ்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தூத்துக்குடி மாவட்டத்தில் குழந்தைகளின் வீர தீர
செயல்களுக்கான தேசிய விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 6 வயது
முதல் 18 வயது வரையிலான ஆண் பெண் குழந்தைகள் மற்ற குழந்தைகளுக்கு முன்
உதாரணமாக துணிச்சலாக சாதித்த வீர தீர செயலுக்கு இந்த விருது
வழங்கப்படுகிறது.
வீர தீர செயலுக்கான நடைபெற்ற சம்பவம் ஜூலை 12 முதல்
30.06.2013க்குள் நிகழ்ந்ததாக இருக்கவேண்டும். தகுதியுடையவர்களிடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
விண்ணப்பங்களை வரும் 30-7-2013க்குள் மாவட்ட சமூக நல அலுவலருக்கு அனுப்பவேண்டும்.
மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், 5ஏ
டூவிபுரம் 11வது தெரு, சங்கர நாராயணன் பிள்ளை பூங்கா பின்புறம்
தூத்துக்குடி என்ற முகவரியில் தொடர்பு கொண்டு மேலும் விபரங்களை
தெரிந்துகொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment