அரசு பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து விரைவில் கல்வித்துறை ஆய்வு செய்ய உள்ளது.
இதுகுறித்து, கல்வித்துறை வட்டாரங்கள் கூறியதாவது: நபார்டு வங்கி
கடனுதவி மூலம், அரசு பள்ளிகளில், புதிய கட்டடங்கள் மற்றும் கூடுதல்
வகுப்பறைகள் கட்டப்படுகின்றன.
"பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர் எண்ணிக்கைக்கு ஏற்ப, தேவையான
எண்ணிக்கையில், கழிப்பறை வசதி மற்றும் குடிநீர் வசதி இருக்க வேண்டும்" என
சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இந்த, இரு அம்சங்கள் குறித்தும், விரைவில், மாவட்ட வாரியாக ஆய்வு
செய்யப்பட உள்ளது. ஆய்வின் அடிப்படையில், அடுத்த கட்ட நடவடிக்கை
எடுக்கப்படும். கல்வித் துறை இணை இயக்குனர்கள், ஆய்வுப் பணியில் ஈடுபடுவர்.
இவ்வாறு, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
No comments:
Post a Comment