"மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த மாணவர்கள், அதற்கான கட்டணம் செலுத்திய
ரசீதை, தேர்வுத் துறைக்கு, உடனடியாக அனுப்ப வேண்டும்" என தேர்வுத்துறை
வலியுறுத்தி உள்ளது.
கடந்த மார்ச்சில், 10ம் வகுப்பு
பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள், பல பாடங்களுக்கு, மறுகூட்டல் கோரி,
இணையதளத்தில் விண்ணப்பித்துள்ளனர். ஆனால், அவர்களில் பலர், மறுகூட்டல்
கட்டணம் செலுத்தியதற்கான ஆதாரம் இல்லை.
எனவே, சம்பந்தப்பட்ட மாணவர்கள், மறுகூட்டல் கட்டணம் செலுத்தியதற்கான
ரசீதை, "இணை இயக்குனர் (பணியாளர்), அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை-6"
என்ற முகவரிக்கு, வரும், 12ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
"தேர்வுக் கட்டண ரசீதை பெறப்பட்ட பிறகே, சம்பந்தப்பட்ட மாணவரின்
விடைத்தாள், மறுகூட்டல் செய்யப்படும். இல்லை எனில், மறுகூட்டல் செய்யப்பட
மாட்டாது" என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment