சமூக வலைதளங்களில் ஒன்றான, "பேஸ்புக்"கில், 13 வயதுக்குட்பட்டவர்கள் கணக்கு துவங்க டில்லி உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
"பேஸ் புக்" வலைதளத்தில், சிறு குழந்தைகள் முதல்
பெரியவர்கள் வரை, கணக்குகள் துவங்கி, தகவல் தொடர்பு மேற்கொள்கின்றனர்.
குழந்தைகள், படிக்கும் நேரத்தில், இதுபோன்ற வலைத்தளத்தில் நேரத்தை
செலவிடுகின்றனர்; அதைத் தடுக்க வேண்டும் என கோரி, டில்லி ஐகோர்ட்டில், பொது
நல வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி, பி.டி.அகமது மற்றும்
நீதிபதி, விபு பக்ரு ஆகியோர், 13 வயதுக்குட்பட்டவர்கள், "பேஸ்புக்"கில்
கணக்கு துவங்க தடை விதித்தனர். இந்த எச்சரிக்கை, "பேஸ்புக்" வலைதளத்தின்
முகப்பு பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
"பேஸ்புக்" வலைத்தளத்தின் முக்கிய பக்கங்களில், ஐகோர்ட்டின்
உத்தரவுப்படி, 13 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கணக்கு துவங்க தடை
விதிக்கப்படுகிறது என, அந்த வலைதளம் சார்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர்
பராக் திரிபாதி, ஐகோர்ட்டுக்கு உறுதி அளித்தார்.
No comments:
Post a Comment